ஜனநாயகத்தில் மக்களின் நலனில் அரசுக்கு
அக்கறை வேண்டும் என்று சொல்வது உண்டு. இதை எந்த நாடு பின்பற்றுகிறதோ
இல்லையோ இங்கிலாந்து பின்பற்றுகிறது. அங்கு மக்கள் உடல் பருமன் என்ற
பிரச்சினைக்கு ஆளாகி அதன் எதிரொலியாக சர்க்கரை, மாரடைப்பு, மூட்டு வலி
உள்ளிட்ட வியாதிகளை தேடிக்கொள்ளாமல் இருப்பதற்கு உணவு விடுதிகளில் உணவு
பதார்த்தங்களை தயாரித்து அளிப்பதில் அரசு சில கட்டுப்பாடுகளை கொண்டு
வந்துள்ளது.அனைத்து தரப்பினரும் விரும்புகிற பிட்சாவின் அளவை ஒரு அங்குல அளவுக்கு குறைக்குமாறு ஓட்டல்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அறுசுவை கொண்ட கறிவகைகளின் அளவையும் வெட்டிக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.இலவசமாக வழங்குகிற அப்பளம், வடகம் வகையறாக்களை நிறுத்தி விடவும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. இதுபற்றி அரசு தனது இணையதள பக்கத்தில், மக்கள் ஆரோக்கியமாக உணவு உட்கொள்வது முக்கியம் என கூறி உள்ளது. உணவு பதார்த்தங்களின் அளவில் வெட்டு விழுவதால், பொதுமக்கள் உடல் பருமன் என்ற பிரச்சினையில் இருந்து ஓரளவு விடுதலை பெறலாம். ஆனால் அவர்கள் தருகிற விலையில் மாற்றம் கிடையாது. இதனால் உணவு விடுதிகள், ஓட்டல் அதிபர்களுக்கு கொண்டாட்டம்