நேஷனல் இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜி, திருச்சி. முன்பு ரீஜனல் இன்ஜினியரிங் காலேஜ் என்ற பெயரில்
அழைக்கப்பட்டு பின்னர் இந்த பெயர் மாற்றம் பெற்றது.
இந்தியாவின் தலை சிறந்த கல்வி நிறுவனங்களுள் ஒன்றாக கருதப்படும் இந்த நிறுவனத்திற்கு மிகப் பெரிய வளாகமும், 5 ஆயிரம் மாணவர்களும், 500க்கும் அதிகமான ஊழியர்களின் குடும்பங்களும் உள்ளன. இந்த வளாகத்தில் இந்த கல்வி நிறுவனத்திற்கு சொந்தமான மருத்துவமனையும் உள்ளது. இங்கு ஒப்பந்த அடிப்படையில் பணி புரிய நர்சிங் முடித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வயது: என்.ஐ.டி., அறிவித்துள்ள நர்ஸ் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் 50 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
தகுதி: நர்ஸிங் தொடர்புடைய படிப்பை முடித்திருக்க வேண்டும். பணியனுபவம் தேவைப்படும்.
ஊதியம்: இந்தப் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.20 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்படும்.
இதர தேவைகள்: இந்தப் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படும் பட்சத்தில் இரவு மற்றும் பகல் என்று எந்தபொழுதிலும் மருத்துவமனையில் பணியாற்ற வேண்டியிருக்கும்.
விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பதாரர்கள் முழுமையாக நிரப்பப்பட்ட தங்கள் விண்ணப்ப படிவங்களைப் பின்வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
The Dean - ID, National Institute of Technology, Tiruchirappalli - 620 015, Tamil Nadu.
விண்ணப்பங்கள் கிடைக்க இறுதி நாள்: 30.04.2014
இணையதள முகவரி: <http://www.nitt.edu/home/>