10ம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் பெறும் மாணவருக்கு பிளஸ் 1 பயில அரசு நிதியுதவி

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் அரசு பள்ளிகளில் பயின்று அதிக மதிப்பெண் பெறும் பிற்பட்ட மிகவும் பிற்பட்ட
மாணவியரை தமிழகத்தின் தலை சிறந்த தனியார் மேல்நிலைப் பள்ளிகளில் சேர்க்க அரசு முடிவு செய்துள்ளது.
கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு: கடலூர் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் பயின்று 10ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெறும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த 3 மாணவர்கள், 3 மாணவியர்கள் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட, சீர்மரபினர் வகுப்பைச் சார்ந்த தலா 2 மாணவ, மாணவியர்கள் என 10 பேரை பிளஸ் 1 படிப்பினை தமிழகத்தில் தலை சிறந்த தனியார் மேல்நிலைப் பள்ளிகளில் சேர்ந்து பயில விரும்பும் பட்சத்தில் அப்பள்ளிகளில் சேர்ந்து பயில்வதற்கு அரசால் நிதியுதவி வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தில் உதவி பெறும் மாணவ, மாணவியரின் பெற்றோரது ஆண்டு வருமானம் ஒரு லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். இத்திட்டத்தின் கீழ் ஒரு மாணவருக்கு அதிக பட்சமாக ஆண்டொன்றுக்கு 28 ஆயிரத்திற்கும் மிகாமல் இரண்டாண்டுகளுக்கு 56 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படுகிறது.
பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வரப்பெற்றவுடன் தகுதியுடைய மாணவ, மாணவியர் கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலரை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...