திருவண்ணாமலை மற்றும் ஆரணி நாடாளுமன்ற தொகுதிகளில், தேர்தல் பணியில் ஈடுபட்ட அரசு அலுவலர்கள் மற்றும்
ஆசிரியர்கள் 10,934 பேருக்கும், 1,217 போலீசாருக்கும் தபால் வாக்குச்சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளன.
மேலும், தற்போது ராணுவத்தில் பணிபுரியும் வீரர்கள் 5,030 பேருக்கு தபால் வாக்குச்சீட்டுகள், அவர்கள் பணிபுரியும் இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. ஆனால், இதுவரை திருவண்ணாமலை தொகுதியில் 930 பேரும், ஆரணி தொகுதியில் 907 பேரும் மட்டுமே தபால் வாக்குகளை செலுத்தியுள்ளனர்.
இந்நிலையில், தபால் வாக்குச்சீட்டுகளை பூர்த்தி செய்து அனுப்ப வரும் 16ம் தேதி காலை 6 மணி வரை வாய்ப்பு உள்ளது. எனவே, தபால் வாக்குச்சீட்டுகளை பெற்றுள்ள அரசு ஊழியர்கள் மற்றும் போலீசார் ஆகியோர், தங்களுடைய வாக்குச்சீட்டுகளை தபால் நிலையங்கள் மூலமாக அனுப்பி வைக்க வேண்டும் என கலெக்டர் ஞானசேகரன் கேட்டுக்கொண்டுள்ளார். அவ்வாறு அனுப்பப்படும் தபால் ஓட்டுசீட்டுகளுக்கு தபால் வில்லைகள் (ஸ்டாம்ப்) ஒட்டத் தேவையில்லை.
மேலும், தபால் ஓட்டுகளை தபால் மூலமாக மட்டுமே அனுப்பி வைக்க வேண்டும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்