ஜூன் 11-ல் ராணுவ ஆள் சேர்ப்பு முகாம்

தஞ்சாவூர் ஆயுத படை மைதானம் மற்றும் அன்னை சத்யா விளையாட்டு அரங்கத்தில் 14 மாவட்டங்களைச் சேர்ந்த
இளைஞர்கள் பங்கு பெறும் இந்திய ராணுவத்துக்கான ஆள் சேர்ப்பு முகாம் ஜூன் 11-ம் தேதி தொடங்குகிறது என்றார் மாவட்ட ஆட்சியர் என். சுப்பையன்.
மாவட்ட ஆட்சியரகத்தில் புதன்கிழமை நடைபெற்ற அனைத்துத் துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் அவர் மேலும் பேசியது: தஞ்சாவூர் ஆயுதப்படை மைதானம், அன்னை சத்யா விளையாட்டரங்கில் இந்திய ஜூன் 11 முதல் 18-ம் தேதி வரை நடைபெறும் முகாமில் தஞ்சாவூர், திருச்சி, கரூர், பெரம்பலூர், அரியலூர், பட்டுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டினம், சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், திருநெல்வேலி, மதுரை, திண்டுக்கல் ஆகிய 14 மாவட்ட இளைஞர்கள் பங்கேற்கவுள்ளனர். இந்த முகாம் நடைபெறவுள்ளதால் நடைபயிற்சிக்கு வெளிநபர்களை அனுமதிக்கக் கூடாது. இதை முன்கூட்டியே பொதுமக்களுக்குத் தெரிவிக்க வேண்டும். முகாமில் குடிநீர், மின் வசதி, இரும்புத் தடுப்பு அமைத்தல், பாதுகாப்பு, சுகாதார வசதி உள்ளிட்டவற்றை அலுவலர்கள் ஏற்படுத்தித் தர வேண்டும் என்றார் ஆட்சியர்.
கூட்டத்தில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் கு. தர்மராஜன், மாவட்ட வருவாய் அலுவலர் பெ. சந்திரசேகரன், ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் க. வரதராஜன், இந்திய இராணுவ ஆள் சேர்ப்பு முகாம் இயக்குநர் கர்னல் ஜி. ஜார்ஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...