தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீடு; குறை தீர்ப்பு குழுவிடம் பெருகும் புகார்கள்

தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீடு குறித்து, பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ள குறைதீர்ப்பு குழுவிடம் புகார்கள்
பெருகி வருகின்றன.
மாநிலம் முழுவதும், கட்டாய கல்வி உரிமைச்சட்டத்தின் படி தனியார் பள்ளிகளில் விண்ணப்பங்கள் வினியோகிக்கப்பட்டு வருகிறது. பெற்றோர்கள் வரும் 18ம் தேதி மாலை வரை விண்ணப்பங்களை பெற்று, சமர்ப்பிக்கலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.கோவை மாவட்டத்தில், முதன்மை கல்வி அதிகாரியின் உத்தரவில் ஆறு பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு தனியார் பள்ளிகளை கண்காணித்துவருகிறது. இக்குழு, முதன்மை கல்வி அலுவலகத்தின் ஒரு பகுதியில், செயல்பட்டு வருகிறது. நேரடியாக அணுகும் பெற்றோர்களின் சந்தேகங்களுக்கும் உரிய முறையில் விளக்கமளிக்கப்படுகிறது.கடந்த சில நாட்களில் 200க்கும் மேற்பட்டவர்களிடம் இருந்து புகார்கள் பெறப்பட்டுள்ளன. இதுதவிர, 80 பேர் நேரடியாக முதன்மை கல்வி அலுவலகத்தில் அமைந்துள்ள குறைதீர்ப்பு குழுவை அணுகி புகார்களை பதிவு செய்துள்ளனர்.குழு ஒருங்கிணைப்பாளர்கள் கூறுகையில்,'பெற்றோர்களிடம் இருந்து தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. புகார்கள் பெறப்பட்டதும், சம்பந்தப்பட்ட பள்ளியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு விளக்கம் கேட்கப்படுவதுடன் விண்ணப்பங்கள் உரிய முறையில் வழங்கவும் உத்தரவிடப்படுகிறது. சில பெற்றோர்களுக்கு, 25 சதவீத இடஒதுக்கீடு குறித்து விழிப்புணர்வு இல்லாமையால், தேவையற்ற அழைப்புகளும் வருகின்றன. 'எந்த ஒரு தனியார் பள்ளியாக இருந்தாலும், ஆரம்பநிலை வகுப்புகளில் மட்டுமே மாணவர்களை, இடஒதுக்கீடு பிரிவின் கீழ் சேர்க்க இயலும். தொலைபேசியில் புகார்கள் தெரிவித்தாலும், நேரடியாக புகார்களை பதிவு செய்ய அறிவுறுத்திவருகிறோம்' என்றனர்.


SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...