வங்க கடலில் ஏற்பட்டுள்ள மாற்றத்தால், தமிழகம் மற்றும்
புதுச்சேரியில், அடுத்த 48 மணி நேரத்தில் கனமழை பெய்யும் வாய்ப்பு உருவாகி
உள்ளது.இந்த ஆண்டு மார்ச் மாத துவக்கத்திலேயே, தமிழகம் முழுவதும் கோடை வெயில் சுட்டெரிக்க துவங்கியது. கடல் காற்று வீசாத நிலையில், தமிழகத்தின் பல நகரங்களில் கடும் வெப்ப நிலையே நீடித்தது. வெப்ப சலனம் காரணமாக, அவ்வப்போது ஒரு சில இடங்களில் மழை பெய்தாலும் அது போதுமானதாக இல்லை. இந்நிலையில் கடந்த சில தினங்களாக தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில், பல இடங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவது, மக்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தி உள்ளது.
: கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவிய டெல்டா மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மேலும், கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில், தொடர்ந்து மழை பொழிவு உள்ளதால், அங்குள்ள நீர்நிலைகளிலும், அணைக்கட்டுகளிலும் நீர் மட்டம் அதிகரித்துள்ளது. கோடையில் பெய்து வரும் இந்த மழை, விவசாயிகளுக்கு ஒரு வரப்பிரசாதமாகவே கருதப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில், நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் அதிகபட்சமாக 7 செ.மீ., மழை பெய்துள்ளது. மேலும், முத்துப்பேட்டை, காரைக்கால், ராமநாதபுரம், சேத்தியாதோப்பு,கோவிலங்குளம், கடலூர், மணமேல்குடி, குளச்சல் ஆகிய பகுதிகளில் 5 செ.மீ., மழை பெய்துள்ளது.
இந்நிலையில், இந்த கோடை மழை தொடரும் என்ற நல்ல செய்தி வெளியாகி உள்ளது. இது குறித்து, வானிலை நிலைய இயக்குனர் ரமணன், சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், 'வங்க கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது, மேற்கு நோக்கி நகரும் என்பதால், தமிழகம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களிலும், கேரளா, ஆந்திரா மற்றும் கர்நாடகா கடலோர பகுதிகளிலும், அடுத்த 48 மணி நேரத்தில் மழை பொழிவு இருக்கும். தென் தமிழகத்தை பொறுத்த வரையில், அடுத்த 24 மணி நேரத்தில் கனமழை பெய்ய துவங்கும். வட தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளிலும் மழை இருக்கும். தமிழக கடலோரங்களிலும், லட்சத்தீவிலும், கடல் கொந்தளிப்புடன் காணப்படும்,' என்றார். சென்னை நகரை பொறுத்த வரையில், வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், ஒரு சில இடங்களில் மழையை, கனமழையோ பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
வங்க கடலில் உருவாகி வரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று வருவதால், கடல் கொந்தளிப்பாக இருக்கும் என்றும், எனவே, தமிழகம், புதுச்சேரி, லட்சத்தீவு மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளனர். வாராது வந்த மாமழை என்று கூறும் வகையில், கடந்த பல மாதங்களாக நிலவிய வறட்சியை போக்கும் வகையில், இந்த கோடையில் மழை பெய்ய துவங்கி உள்ளது. இந்த மழை மேலும் சில தினங்களுக்கு தொடரும் என்ற அறிவி்ப்பு, விவசாயிகள் மட்டுமல்லாது, குடிநீர் இன்றி தவிக்கும் பொதுமக்களின் வயிற்றிலும், பாலை வார்த்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே மழை பெய்து வந்த நிலையில், நேற்று முன்தினம் முதல் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால், அங்குள்ள கால்வாய்களில் நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்நிலையில், நாகர்கோயிலை அடுத்த மடீஸ்வரம், காரைக்காமடத்தைச் சேர்ந்த சாய்ராம், 3, என்ற சிறுவன், கால்வாயில் விளையாடிக் கொண்டிருந்தபோது, வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டான். அவனது உடலை, தீ அணைப்பு துறையினர் மீட்டுள்ளனர்.

மயிலாடுதுறையில் அதிக பட்சம்

48 மணி நேரத்தி்ல் கனமழை

மீனவர்களுக்கு எச்சரிக்கை:
வங்க கடலில் உருவாகி வரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று வருவதால், கடல் கொந்தளிப்பாக இருக்கும் என்றும், எனவே, தமிழகம், புதுச்சேரி, லட்சத்தீவு மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளனர். வாராது வந்த மாமழை என்று கூறும் வகையில், கடந்த பல மாதங்களாக நிலவிய வறட்சியை போக்கும் வகையில், இந்த கோடையில் மழை பெய்ய துவங்கி உள்ளது. இந்த மழை மேலும் சில தினங்களுக்கு தொடரும் என்ற அறிவி்ப்பு, விவசாயிகள் மட்டுமல்லாது, குடிநீர் இன்றி தவிக்கும் பொதுமக்களின் வயிற்றிலும், பாலை வார்த்துள்ளது.
மழைக்கு குழந்தை முதல் பலி: