திறனாய்வுத் தேர்வு முடிவு: மே 5-ல் வெளியீடு

கல்வி உதவித் தொகை பெறத் தகுதியான மாணவர்களை தேர்வு செய்யும் வகையில் நடத்தப்பட்ட தேசிய திறனாய்வுத் தேர்வின் முடிவு வரும் 5-ம் தேதி (திங்கள்கிழமை) வெளியிடப்படுகிறதுஇதுதொடர்பாக அரசு தேர்வுகள் இயக்குநர் கு.தேவராஜன் வெள்ளிக்கிழமை வெளியிட்ட
செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகை திட்ட (NMMS) தேர்வு கடந்த பிப்ரவரியில் நடத்தப்பட்டது. இத்தேர்வு முடிவு மே 5-ம் தேதி (திங்கள்கிழமை) காலை 10.30மணிக்கு வெளியிடப்படுகிறது. தேர்வு முடிவுகளை அரசு தேர்வுத் துறை இணையதளம் www.tndge.in மூலம் அறிந்துகொள்ளலாம்இவ்வாறு தேவராஜன் கூறியுள்ளார்.

8-ம் வகுப்பு மாணவர்களுக்காக நடத்தப்படும் இந்த சிறப்பு திறனாய்வுத் தேர்வை தமிழகத்தில் 1.47 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினர். இந்த தேர்வில் வெற்றிபெறும் 6,695 பேருக்கு பிளஸ் 2 வரை கல்வி உதவித்தொகையாக மாதம் ரூ.500 வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...