அக்னிநட்சத்திரம் தொடங்குகிறது.

தமிழகத்தில் கடும் வெப்பம் எனப்படும் அக்னிநட்சத்திரம் ஞாயிற்றுக்கிழமை (மே 4) தொடங்குகிறது.

இந்தப் பருவத்தில் கத்திரி வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோடை காலமான சித்திரை, வைகாசி அதாவது ஏப்ரல், மே மாதங்களில் பூமிக்கு அருகில் சூரியன் வருவதால் வெயில் தாக்கம் அதிகமாக இருக்கும். தமிழகத்தில் கடந்த ஒரு மாதங்களுக்கு மேலாக கடும் வெப்பம் இருந்தது. திருச்சி, வேலூரில் அதிகபட்சம் 107 டிகிரி வெப்பம் இருந்ததாக கணக்கிடப்பட்டுள்ளது. திருநெல்வேலியில் 103 டிகிரி வெப்பம் இருந்து வருகிறது.
கடும் வெப்பம் காரணமாக இளநீர், தர்பூசணி, குளிர் பானங்களின் விற்பனை அதிகரித்துள்ளது. கடந்த 2 தினங்களாக பெய்து வரும் கோடை மழையால் வெப்பம் தணிந்து காணப்படுகிறது.
இதனிடையே சித்திரை மாதம் இறுதியில் ஆரம்பமாகும் அக்னிநட்சத்திரத்தில் கடும் வெப்பம் இருக்கும். ஞாயிற்றுக்கிழமை (சித்திரை 20) தொடங்கும் அக்னிநட்சத்திரம் மே 28-ஆம் தேதி வரை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அக்னிநட்சத்திரத்தின் முதல் வாரத்தில் கடும் வெப்பம் காணப்படும். 2-ஆவது வாரத்தில் கத்திரி வெயில் தொடங்கி கடும் வெப்பத்தை தரும். 3-ஆவது வாரத்தில் வெயிலின் தாக்கம் குறைந்து காணப்படும். அக்னிநட்சத்திரம் முடிந்த ஒரு சில தினங்களில் பருவக் காற்று வீசத் தொடங்கும். அதன் தொடர்ச்சியாக தென்மேற்கு பருவ மழை பெய்யத் தொடங்கும் என வானிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...