அரசு மருத்துவ கல்லூரி சேர்க்கைக்கு அனுமதி இல்லை: மருத்துவ கவுன்சில் அதிரடி நடவடிக்கை

அரசு மருத்துவ கல்லூரியில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு மருத்துவ கவுன்சில் அனுமதி அளிக்க மறுத்துள்ளதால்
மருத்துவக் கல்வி கனவில் இருந்த மாணவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
புதுச்சேரி அரசு மருத்துவ கல்லூரியில் 150 எம்.பி.பி.எஸ். இடங்கள் உள்ளன. புதுச்சேரியில் அரசு கல்லூரியில் மட்டுமே இலவச மருத்துவ கல்வி அளிக்கப்படுவதால், இக்கல்லூரி இந்தியா முழுவதும் உள்ள மாணவர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இக்கல்லூரியில், மருத்துவ கவுன்சில் விதிமுறைப்படி வசதிகள் செய்யப்படாததால் மாணவர் சேர்க்கைக்கு ஆண்டுதோறும் சிக்கல் ஏற்பட்டு வருகிறது. கடும் இழுபறிக்கு பின்னரே அனுமதி கிடைப்பது வாடிக்கையாக உள்ளது.
முதலாமாண்டு மாணவர் சேர்க்கையின்போது ஐகோர்ட் தலையிட்டதால் கடைசி நேரத்தில் அனுமதி கிடைத்தது. கல்லூரி துவங்கியதில் இருந்து கடந்த நான்கு ஆண்டுகளாக இதே நிலை நீடித்து வருகிறது. இந்தாண்டு, இந்திய மருத்துவ கவுன்சில் சுட்டிக்காட்டிய பேராசிரியர் பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு குறைபாடுகளை கல்லூரி நிர்வாகம் சரி செய்து மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பித்திருந்தது. இந்நிலையில், அரசு மருத்துவ கல்லூரியை சமீபத்தில் பார்வையிட்ட மருத்துவ கவுன்சில் குழுவினர் செயற்குழு கூட்டத்தில் ஆய்வறிக்கை வைத்து ஆலோசித்தனர்.
அப்போது, கல்லூரியில் பேராசிரியர் பற்றாக்குறை, பணியிடங்கள், ஆய்வு உபகரணங்கள் உள்ளிட்டவைகளில் குறைபாடுகள் இருப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. இறுதியில், இந்தாண்டு 2014-15 மாணவர் சேர்க்கைக்கு அனுமதி தருவதில்லை என கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. இது தொடர்பான, அதிகாரபூர்வமான அறிவிப்பு மருத்துவ கவுன்சில் இளையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநில அரசுக்கும் கடிதம் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சுகாதாரத் துறை உயர் அதிகாரிகள் கூறும்போது, "கல்லூரியில் பணியிடங்கள் நிரப்ப கோப்பு அனுப்பப்பட்டுள்ளது. தேர்தல் காரணமாக அனுமதி பெற முடியவில்லை. ஓட்டு எண்ணிக்கை முடிந்ததும், பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக மருத்துவ கவுன்சில் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட உள்ளது. எனவே, மருத்துவ கவுன்சில் அனுமதி பெற்று மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் நடத்தப்படும்" என்றனர்.
புதுச்சேரி அரசு கல்லூரியில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு மருத்துவ கவுன்சில் அனுமதி மறுத்துள்ளதால், இலவச மருத்துவ கல்வி கனவில் இருந்த மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியும், கலக்கமும் ஏற்பட்டுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...