அரசு பள்ளிகளில் ஆங்கில வழி போதனைக்கு மவுசு அதிகரிப்பு

நீலகிரி மாவட்ட அரசு பள்ளிகளில், ஆங்கில வழி போதனைக்கு, பெற்றோர் மத்தியில் மவுசு அதிகரித்துள்ளது;
தேர்ச்சி விகிதத்தில் இது வெளிப்பட்டதால், நடப்பாண்டு அனைத்து அரசுப் பள்ளிகளிலும் ஆங்கில வழி போதனையை அமல்படுத்த கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் சமீபத்தில் வெளியான பிளஸ் 2 தேர்வு முடிவுகளில், அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் கல்வித் துறைக்கு திருப்தியை ஏற்படுத்தியுள்ளது. நடந்து முடிந்த பிளஸ் 2 தேர்வு முடிவுகளில் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் 3,242 மாணவ, மாணவியர் தேர்வெழுதி 2,414 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்; இது 74.46 சதவீத தேர்ச்சி விகிதமாகும்.
உதவி பெறும் தனியார் மெட்ரிக். பள்ளிகளை ஒப்பிடுகையில், தேர்ச்சி விகிதம் குறைவு என்றாலும், மக்கள் மத்தியில் வரவேற்பு குறைந்த அரசு பள்ளிகளில் இந்தளவு தேர்ச்சி விகிதம் வந்திருப்பது மாவட்ட கல்வித் துறை வட்டாரத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆங்கில போதனைக்கு மவுசு: பெற்றோர், குழந்தைகள் மத்தியில் அதிகரித்துள்ள ஆங்கில மோகத்தால் அரசு பள்ளிகளை தவிர்த்து தனியார் பள்ளிகளை பெற்றோர் நாடி ஓடிய நிலையில், கடந்த இரு ஆண்டுகளாக மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் ஆங்கில போதனை மெல்லமெல்ல அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. கடந்தாண்டு 25 பள்ளிகளில் முதல் மற்றும் 6ம் வகுப்புகளில் ஆங்கில போதனை அறிமுகம் செய்யப்பட்டது. தவிர, பிளஸ் 2 தேர்வில் அரசு பள்ளிகளில் அளவில் முதலிடம் பிடித்த மூவரில், இருவர், 11, 12ம் வகுப்பை ஆங்கில வழி போதனையில் பயின்றவர்கள் என்பது குறிப்பிடதக்கது.
அனைத்து பள்ளிகளிலும் அமல்: இந்நிலையில் நடப்பாண்டு அரசு பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கையை அதிகப்படுத்த அனைத்துப் பள்ளிகளிலும் ஆங்கில வழி போதனையை அமல்படுத்த மாவட்ட கல்வித் துறை திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி பாலமுரளி கூறுகையில், "மாவட்டத்தில் 88 அரசுப் பள்ளிகள் உள்ளன; கடந்தாண்டு 25 பள்ளிகளில் ஆங்கில வழி போதனை அறிமுகம் செய்யப்பட்டது.
நடப்பாண்டு அனைத்து பள்ளிகளிலும் ஆங்கில வழி போதனையை துவக்க திட்டமிட்டு பள்ளி தலைமையாசிரியர்களுக்கு உரிய அறிவுரை வழங்கப்பட்டுள்ளது; பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆங்கில வழி போதனை அறிமுகப்படுத்தப்படும்" என்றார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...