அமைச்சர் வீட்டை முற்றுகையிட முயற்சி: தமிழ்வழிக் கல்வி கூட்டு இயக்கத்தினர் கைது


பள்ளிகளில் ஆங்கிலம் திணிக்கப்படுவதை கண்டித்து, சென்னையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் வீட்டை
முற்றுகையிடும் போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்ட தமிழ் வழிக் கல்வி கூட்டு இயக்கத்தினர் கைது செய்யப்பட்டனர்.
இது குறித்த விவரம்:
தமிழகத்தில் பள்ளிகளில் ஆங்கிலம் திணிக்கப்படுவதை கண்டித்தும், தமிழ் வழி கல்வியை ஊக்குவிக்கக் கோரியும் தமிழ் வழி கல்வி கூட்டு இயக்கத்தினர் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் வீட்டை முற்றுகையிடும் போராட்டத்தை புதன்கிழமை நடத்தினர்.
இப் போராட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் பழ.நெடுமாறன், மதிமுக துணை பொதுச் செயலர் மல்லை சத்யா, பெ.மணியரசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். போராட்டத்தில் தமிழ் வழி கல்வியை ஊக்குவிக்க கோரி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இதையடுத்து அமைச்சர் வீட்டை முற்றுகையிட முயன்ற அந்த இயக்கத்தைச் சேர்ந்த 181 பேரை போலீஸார் கைது செய்தனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...