பொறியியல் படிப்பில் சேருவதற்காக கடந்த 3 ம் தேதி முதல் விண்ணப்ப படிவங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. பூர்த்தி
செய்த விண்ணப் பங்களை வருகிற 20–ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இதற்கிடையே என்ஜினீயரிங் படிப்புக்கு விண்ணப் பிக்கும் மாணவ–மாணவிகளின் வசதிக்காக கடந்த ஆண்டு கட்ஆப் மார்க் விவரங்களை அண்ணா பல்கலைக் கழகம் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. இதை www.annauniv.edu என்ற இணைய தளத்தில் பார்க்கலாம். இதில் கடந்த ஆண்டின் கல்லூரிகள், பாடப் பிரிவுகள், இடஒதுக்கீடு வாரியான கட்ஆப் விவரங்களை மாணவர்கள் அறிந்து கொள்ளலாம்