வங்கி கணக்கு வாயிலாக கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

பள்ளி, கல்லூரி மற்றும் அஞ்சல் வழி கல்வி பயிலும் மாற்றுத்திறன் படைத்த மாணவ, மாணவியர், வங்கி கணக்கு
வாயிலாக கல்வி உதவித்தொகை பெற, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம், என, கலெக்டர் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: மாற்றுத்திறன் படைத்த மாணவ, மாணவியர் கல்வி கற்பதை ஊக்குவிக்கும் பொருட்டு, முதல் வகுப்பு முதல் முதுநிலை உயர்கல்வி வரை தமிழக அரசு கல்வி உதவித்தொகை வழங்குகிறது. மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலமாக, ஆண்டுக்கு 1,000 ரூபாய் முதல் 7,000 ரூபாய் வரை கல்வி உதவி வழங்கப்படுகிறது.
பள்ளி, கல்லூரி மற்றும் அஞ்சல் வழி கல்வி பயிலும் மாற்றுத்திறன் மாணவ, மாணவியர் உதவித்தொகை பெறலாம். மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையில் விண்ணப்பத்தை பெற்று, பூர்த்தி செய்து, பள்ளி தலைமை ஆசிரியர் அல்லது கல்லூரி முதல்வர் சான்றொப்பம் பெற்று, மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை நகல், வங்கி கணக்கு விவரங்களை இணைத்து, கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு, கலெக்டர் தெரிவித்துள்ளார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...