இளம் அறிவியல் விஞ்ஞானிகளை உருவாக்க அரசு பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி

தமிழகத்திலுள்ள அரசு பள்ளி, அரசு உதவிபெறும் பள்ளியில் படிக்கும் அறிவியலில் ஆர்வம் கொண்ட மாணவ, மாணவிகளை
தேர்வுசெய்து இளம் அறிவியல் விஞ்ஞானிகளை உருவாக்க 18 நாட்கள் அறிவியல் பயிற்சி வகுப்பை தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்பக் கழகம் நடத்துகிறது.
நடப்பாண்டு ஈரோடு - திருப்பூர் மாவட்ட அரசு பள்ளிகளில் படிக்கும் 80 மாணவ, மாணவிகளை தேர்வுசெய்து, ஈரோடு சி.என். கல்லூரியில் அறிவியல் பயிற்சி முகாம் கல்லூரி முதல்வர் சரவணபவா தலைமையில் ஏப்., 28ல் துவங்கியது. வரும் 15ம் தேதி வரை நடக்கிறது. முனைவர் நிஷாராபேகம், முரளிதரன், பேராசிரியர் சுதாகர், மோகன்ராஜ் ஆகியோர் பயிற்சி வகுப்பினை நடத்துகின்றனர்.
முனைவர் நிஷாராபேகம் கூறியதாவது, திருப்பூர், ஈரோடு மாவட்ட அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளின் 80 மாணவ, மாணவிகள் தேர்வு செய்து, கல்லூரி வளாகத்தில் தங்கவைத்து பயிற்சி வழங்குகிறோம். இயற்பியல், வேதியியல், விலங்கியல், தாவரவியல் பாடங்களில் அடிப்படை முதலாக, ஆராய்ச்சி கட்டுரைகள் தயாரிப்பது வரையிலான பயிற்சிகள் மாணவர்களுக்கு வழங்கப்படும்.
காலையில் யோகா, தியானமும், மாலையில் விளையாட்டு போட்டிகளும், இரவில் வானசாஸ்திரம், கலை நிகழ்ச்சிகள், மேஜிக் கற்றுத்தரப்படும். வாரந்தோறும் சனிக்கிழமை தொழிற்சாலை ஆய்வுக்காக கல்லூரிகளுக்கு அழைத்து செல்கிறோம். அறிவியல் பயிற்சி வகுப்பில் வழங்கப்படும் சான்றிதழ்கள், தேசிய அறிவியல் கருத்தரங்கம் மற்றும் சர்வதேச அறிவியல் ஆராய்ச்சியில் நேரடியாக பங்கேற்க உதவுகிறது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...