"பி.இ. படிப்பை சிறப்பாக படித்தால் வேலை வாய்ப்பு பிரகாசமாக உள்ளது" என, அண்ணா பல்கலை துணைவேந்தர் ராஜாராம்
தெரிவித்தார்.
அண்ணா பல்கலையில் பி.இ. விண்ணப்ப வினியோகத்தை துணைவேந்தர் ராஜாராம் நேற்று காலை துவக்கி வைத்தார். பின், நிருபர்களிடம் அவர் கூறியதாவது: கடந்த ஆண்டு புதிய பாட திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. புதிய பாடத் திட்டத்தை நினைத்து மாணவர்கள் கவலைப்பட வேண்டாம். பி.இ. படிப்பை சிறப்பாக படித்தால் வேலைவாய்ப்பு பிரகாசமாக இருக்கும்.
எந்த பிரிவை எடுத்து படித்தாலும் அதில் நம்பிக்கையுடனும், ஆர்வத்துடனும் படிக்க வேண்டும். அப்படி படித்தால், நல்ல வேலை வாய்ப்பை பெறலாம். பி.இ., விண்ணப்பத்தை ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்கள் தவிர்த்து இதர நாட்களில் காலை முதல் மாலை வரை பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு, ராஜாராம் தெரிவித்தார்.