ஸ்கூல் பஸ்கள்... ஒரு பகீர் ரிப்போர்ட்


பள்ளிகள் தொடங்க இன்னும் ஒரு வாரம் உள்ள நிலையில், பெரும்பாலான பெற்றோர்கள் அப்ளிகேஷன் வாங்கி, ஒருவழியாக அட்மிஷனை முடிச் சாச்சு, என தங்கள் மகளை, மகனை பிரபலமான பள்ளிகளில் சேர்த்துவிட்ட சந்தோஷத்தில் இருப்பார்கள். ஆனால், இனிமேல் அவர்களுக்கு இ ருக்கும் அடுத்தப் பிரச்சனை பள்ளி வாகனம். தாம்பரத்தை அடுத்த பெருங்களத்தூரை சேர்ந்த 2ம் வகுப்பு மாணவிக்கு கடந்த இரண்டாண்டுகளுக்கு முன் நேர்ந்த கொடுமையை நம்மால் எளிதில் மறக்கமுடியுமா? தாம்பரத்தை அடுத்த சேலையூரில் உள்ள தனியார் பள்ளியின் மாணவியான அச்சிறுமிக்கு அன்று உடம்பு சரியில்லை. சிறுமியின் அப்பா ‘மத்தியா னம் உன்னை வீட்டுக்கு அழைத்து வந்து விடுகிறேன்‘ என்று சொல்லி, பள்ளி பேருந்தில் அனுப்பி வைத்தார். கொஞ்ச தூரம் சென்றதுமே, பஸ்சில் இருந்த ஒட்டை வழியாக அச்சிறுமி தவறி விழ, அதே பஸ்சின் பின் சக்கரம் ஏறி கண்ணிமைக்கும் நேரத்தில், அனைத்தும் முடிந்து விட்டது. இப் போது புரிகிறதா? இவ்விஷயத்தில் பெற்றோருக்கும் பொறுப்பு இன்னும் இருக்கிறது என்பது. சொந்தமாக டூ-வீலர், கார் வைத்து இருப்பவர்கள், மேலும் மகள், மகனை அழைத்துவர வீட்டில் ஆள் இருக்கும் பட்சத்தில் பிரச்சனையும் கிடை யாது. பள்ளிக்கு புறப்பட்ட குழந்தை பத்திரமாக வீடு வந்து சேர்ந்து விடும். ஆனால், இன்றைய வாழ்க்கைச் சூழலில் பெற்றோர் 2 பேரும் வேலைக்கு சென்றுவிட, குழந்தைகள் பள்ளி பேருந்து, தனியார் வேன், ஆட்டோக்களில்தான் வீட்டிற்கு வர வேண்டியுள்ளது. பள்ளி வாகனம் மற் றும் தனியார் வாகனங்கள் விஷயத்தில் பெற்றோராகிய உங்களுக்கும் இதில் பங்கு இருக்கிறது என்பதையும் மறுக்க முடியாது. தங்கள் பிள்ளைகளை அனுப்பும் வாகனத்தில் அளவுக்கு அதிகமான குழந்தைகள் செல்கிறார்களா? என்பது போன்ற விஷயங்களில் பெற்றோர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அச்சிறுமிக்கு ஏற்பட்ட சம்பவத்துக்குப் பின்பு விழித்த வட்டார போக்குவரத்து அலுவலக அதிகாரிகளும், டிராஃபிக் போலீசாரும் பள்ளி வாகனங் கள் தனியார் வேன், ஆட்டோ என அனைத்து வாகனங்களையும் சோதனையிடத் தொடங்கினர். தமிழகத்தில் எந்த மூலையில் மாணவ, மாணவியருக்கு சிறு விபத்து ஏற்பட்டாலும், எல்லா வாகனங்களையும் சீஸ் செய்வோம், லைசன்ஸ் ரத்து செய்யப்படும் என எச்சரித்தனர். கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் என்றாலும், எல்லா டிரைவர்களும் தங்கள் வண்டிகளில் ஆடும் சேர்கள், சரி யாக மூடமுடியாத கதவு, ஜன்னல் என எல்லாவற்றையும் சரி செய்தனர். ஆட்டோ டிரைவர்கள் ஒருபக்கம் கதவு பொருத்தி, தங்களுடைய சீட்டுக்குப் பக்கத்தில் மாணவர்களை உட்கார வைத்து அழைத்துப் போவதை நிறுத்தினர். ஆர்.டி.ஒ. அதிகாரிகள், டிராஃபிக் போலீசார் அதன் பின்னரும் பள்ளி வாகன பாதுகாப்பு அம்சங்களை கண்காணிப்பதில் தங்கள் க டும் நடவடிக்கைகளை தொடர்ந்தனர். ஆனால், அடுத்த சில மாதங்களிலேயே, சேலத்தில் உள்ள தனியார் பள்ளி டிரைவர் குடித்துவிட்டு, வேனை ஓட்ட கட்டுப்பாட்டை இழந்த வேன் குளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால் அதிர்ச்சி அடைந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தங்களு டைய நடவடிக்கைகளை இன்னும் கடுமையாக்கினர். இந்நிலையில், பள்ளிகள் தொடங்கப்போவதையொட்டி, தமிழக அரசு உத்தரவுப்படி மாநிலம் முழுவதும் உள்ள பள்ளி வாகனங்கள் சோதனை செய் யப்பட்டு வருகின்றன. அதன்படி அந்தந்த வட்டார போக்குவரத்து அலுவலர் தலைமையில் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு கடந்த 7ம் தேதி முதல் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. வட்டார போக்குவரத்து அலுவலகம், போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள் பள்ளி வாகனங்களின் கண்டிஷன், எஃப்.சி என்ற ஃபிட்னஸ் சர்டிபிகேட் ஃபார் டிரான்ஸ்போர்ட் வெகிகள்ஸ், லைசன்ஸ், ரிஜிஸ்ட்ரேஷன் சர்டிபிஃகேட் போன்றவற்றை மீண்டும் சரி பார்க்க தொடங்கியுள்ளனர். சென்னையில் மட்டும் 646 வாகனங்களை ஆய்வு செய்ய முடிவு செய்துள்ளனர். கிட்டதட்ட பாதியளவு பஸ் மற்றும் வேன்கள் சோதனை செய்யப்பட்டுள்ளன. அடுத்த தலைமுறையினரின் கல்வி வாழ்க்கை மற்றும் எதிர்காலம் சம்பந்தப்பட்ட விஷயம் என்பதால், இதில் திரைமறைவு வேலைகள் எதுவும் நடக்காமல் பார்க்க வேண்டியது சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கடமை. பள்ளி வாகனங்கள் குறித்து ராஜேஸ்வரி கூறுகையில், ஸ்கூல் வேனுக்கு குறைந்த தூரத்துக்குக் கூட நிறைய பணம் வசூலிக்கிறாங்க பல பள்ளிகள்ல, ஆனால் குழந்தைகளுக்கு சரியான பாதுகாப்புக் கொடுக்கிறதில்லை. பல வேனே இறக்கிவிட்ட குழந்தை அங்க நிற்பது தெரியாம இடிச்சுட்டு போயிருக்கு. அது மாதிரி சில குழந்தைங்க இறந்தது நமக்கெல்லாம் தெரியும். அதனால ஸ்கூல் நிர்வாகிகள் குழந்தைங்க உயிரை துச்சமா மதிக்கக்கூடாது. ஸ்கூல் வேனோட கண்டிசன் சரியா இருக்கா? வேன் ஓட்டுனர் குடித்திருக்கிறாரா என்றெல்லாம் செக் பண்ணி தான் குழந்தைகளை ஏத்தணும். குழந்தைங்க நல்லபடியா வீடு திரும்பற வரை பெத் தவங்க உயிரை கையில பிடிச்சிட்டு இருக்காங்க என்ற வலியை ஸ்கூல் நிர்வாகிகள் உணரணும்

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...