ி: "ஒவ்வொரு குழந்தைக்கும் வாழும் உரிமைகள், வளரும் உரிமைகள்,
பாதுகாப்பு உரிமைகள், பங்கேற்கும் உரிமைகள் வழங்க
குழந்தைகள் உரிமை சாசனம் வலியுறுத்துகிறது" என்று, கலெக்டர் ராஜேஸ் தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில் கிராம நிர்வாக அலுவலர்களுக்கான குழந்தைகள் பாதுகாப்பு அலகு குறித்த கருத்தரங்கு நடந்தது. கருத்தரங்கை, குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து, கலெக்டர் ராஜேஸ் பேசியதாவது:
இந்தியா ஐ.நா. சபையின் குழந்தைகள் உரிமைகள் சாசனத்தில் கையெழுத்திட்டதின் விளைவாக, குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணை சட்டம் 2005ல் இயற்றப்பட்டது. குழந்தைகள் உடரிமைகள் பாதுகாப்பு ஆணை சட்டம், 2005 முதல் தமிழ்நாட்டில் செயல்பட்டு வருகிறது.
நடைமுறையில் இருக்கும் குழந்தைகள் தொடர்பான சட்டங்கள் ஆய்வு செய்தல் மற்றும் அதை திறம்பட செயல்படுத்த தேவையான நடவடிக்கையை பரிந்துரை செய்தல், குழந்தைகளின் உரிமைகள் மீறப்படும் நேரங்களில் விசாரணை செய்தல் மற்றும் அது தொடர்பான வழக்குகளைத் துவங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல், இயற்கை பேரிடர்கள், கடத்தல், பாலியல் வன்கொடுமைகள், சாதிக் கொடுமைகள், பயங்கரவாதம், ஹெச்.ஐ.வி. போன்றவற்றால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு தேவையான உதவிகளைச் செய்தல், குழந்தைகளின் சிறந்த நலனைப் பாதுகாக்கும் வகையில் நடைமுறையில் உள்ள சட்டங்களை ஆய்வு செய்து தேவையான திருத்தங்கள் மேற்கொள்ள அரசுக்கு பரிந்துரை செய்தல், குழந்தைகளின் உரிமைகள் குறித்து விழிப்புணர்வை ஊடகங்களின் வழியே மக்களுக்கு கொண்டு சேர்த்தல், மேலும் பாலியல் தாக்குதல், பாலியல் தொந்தரவு ஆகிய குற்றங்களில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்கவும், நீதிமன்றங்கள் மூலம் ஆறு மாதம் முதல் பத்து வருடம் வரை சிறைத் தண்டணை பெற்றுத் தர சட்ட வழிமுறைகள் உள்ளன.
ஒவ்வொரு குழந்தைக்கும் வாழும் உரிமைகள், வளரும் உரிமைகள், பாதுகாப்பு உரிமைகள், பங்கேற்கும் உரிமைகள் வழங்க குழந்தைகள் உரிமை சாசனம் வலியுறுத்துகிறது. குழந்தைத் திருமணம் தடைச் சட்டம் 2006ன் படி இரு ஆண்டுகள் சிறைத் தண்டணை அளிக்கப்படும். குழந்தைத் தொழிலாளர் தடுப்புச் சட்டம் 1986ன் படி மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்படும். 14 வயது முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்களைக் கடினமான மற்றும் அபாயகரமான வேலைகளில் ஈடுபடுத்தக்கூடாது.
14வயதுக்குட்பட்ட அனைவரும் கட்டாயமாக கல்வி கற்க வழிவகை செய்ய வேண்டும். குழந்தைகளைப் பாலியல் தொந்தரவுக்கு உள்ளாக்குவோருக்கு குறைந்த பட்சம் ஏழு ஆண்டுகள் முதல் ஆயுள் காலம் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும்.
எனவே, உங்கள் கிராமத்தில் குழந்தைகளுக்கான குற்றங்களைத் தடுக்க அரசுடன் இணைந்து சேவை செய்ய வேண்டும். மேலும் கிராமங்களில் பள்ளி பயிலும் மாணவ, மாணவியர்கள் மற்றும் குழந்தைகள் தொடர்பான சான்றிதழ்கள் கோறும் போது உடனடியாக பாரிசீலனைசெய்து அவர்களுக்குச் சான்றிழ்கள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும். இவ்வாறு கலெக்டர் பேசினார்.
கருத்தரங்கில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மந்திராசலம், கிருஷ்ணகிரி ஆர்.டி.ஓ. லதா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலார் சிவகாந்தி ஆகியோர் கருத்துரைகளை வழங்கினார்கள். கருத்தரங்களில் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேரந்த கிராம நிர்வாக அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்