டில்லியை எப்போதும் இல்லாத அளவுக்கு தற்போது வெப்பம் வாட்டி வதைத்து வருகிறது. இதனால் மக்கள்
அவதிப்பட்டு வருகின்றனர். கடந்த 2 நாட்களுக்கு முன்னர் 45 டிகிரி வெப்பம் பதிவானது. இது கடந்த 5 ஆண்டுகளில் பதிவான அதிகபட்ச வெப்பநிலை என கூறப்பட்டது. இந்நிலையில், இன்று, இதையும் தாண்டி, கடந்த 62 வருடங்களில் இல்லாத அளவு, 47.8 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது