பிளஸ் 2 தேர்வில், மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் குவித்துள்ளதால், இந்த
ஆண்டு, மருத்துவம் மற்றும் பொறியியல்
படிப்பிற்கு கட் ஆப் மதிப்பெண் உயர்ந்து, கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில், பிளஸ் 2 பொதுத் தேர்வில் 12 ஆயிரத்து 77 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதம் 89.61 சதவீதமாகும். இது, கடந்தாண்டை காட்டிலும் 1.44 சதவீதம் கூடுதலாகும். இது மட்டுமன்றி தனிப்பட்ட முறையிலும் மாணவர்கள் அதிக மதிப்பெண்களை குவித்து மலைக்க வைத்துள்ளனர்.
இயற்பியல் பாடம் கடந்தாண்டு மாணவர்களை கடுமையாக பாதித்தது. ஒரு மாணவர் கூட 200 மதிப்பெண் எடுக்கவில்லை. ஆனால், இந்த ஆண்டு 32 மாணவர்கள் 200க்கு 200 மதிப்பெண் பெற்றுள்ளனர். இதேபோல், வேதியியல் பாடத்தில் 13 மாணவர்கள் மட்டுமே கடந்த ஆண்டு 200 மதிப்பெண் பெற்றனர்.
இந்தாண்டு 15 மாணவர்கள் 200 மதிப்பெண் பெற்றுள்ளனர். உயிரியல் பாடத்தில் கடந்தாண்டு ஒரு மாணவர் மட்டுமே 200 மதிப்பெண் பெற்றார். இது, இந்தாண்டு 6 ஆக உயர்ந்துள்ளது.
பொறியியல் படிப்பை விரும்பும் மாணவர்களுக்கு கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்புதான் கைகொடுத்து, தரவரிசை பட்டியலில் கட் ஆப் மதிப்பெண்ணை கணிசமாக உயர்த்தும். கடந்த 2012ம் ஆண்டு 11 மாணவர்களும், கடந்தாண்டு 33 மாணவர்களும் கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்தில் சதம் அடித்திருந்தனர். இந்தாண்டு இது, 23 ஆக குறைந்து கம்ப்யூட்டர் சயின்ஸ் மாணவர்களை காலை வாரிவிட்டது.
அதே வேளையில், 199 மதிப்பெண்கள் பெற்றவர்களின் எண்ணிக்கை 27 இல் இருந்து இந்தாண்டு 35 ஆக அதிகரித்துள்ளது. கணிதப்பாடத்தில் கடந்தாண்டு 27 மாணவர்கள் 200க்கு 200 பெற்றிருந்தனர். இந்தாண்டு 43 பேர் சதம் அடித்துள்ளனர்.
இந்த கணக்கீடு எல்லாம் தமிழக பாடத்திட்டத்தின்படி தேர்வு எழுதிய புதுச்சேரி, காரைக்கால் மாணவர்களை உள்ளடக்கியது. இதில் மாகி, ஏனாம் மாணவர்கள் சேர்க்கப்படவில்லை. இவர்களையும் சேர்ந்தால் போட்டி கடுமையாக இருக்கும்.
மருத்துவம், பொறியியல் படிப்பிற்கு அடித்தளமாக உள்ள இயற்பியல், வேதியியல், கணிதம், உயிரியல், கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடங்களில் மாணவர்கள் இந்தாண்டு, அதிக மதிப்பெண் குவித்துள்ளதால் கட் ஆப் மதிப்பெண் 2 சதவீதம் தரவரிசை பட்டியலில் அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
நுாலிழை வித்தியாசத்தில்கூட இந்தாண்டு விரும்பிய பொறியியல் படிப்புகளையும், முன்னணி கல்வி நிறுவனங்களையும் மாணவர்கள் இழக்கும் நிலை ஏற்படலாம் என, கல்வியாளர்கள் கருத்து தெரிவித்தனர்.