குழந்தைகள் நான்கு பொருட்கள் கேட்டால், நான் ஒரே ஒரு பொருள் வாங்கிக் கொள்வதற்கான, 'ஆப்ஷன்' கொடுப்பேன்.


பள்ளிகள் திறக்கவுள்ள நிலையில், குழந்தைகளுக்கு தேவையான பொருட்களை எப்படி வாங்கலாம் என்கிறார்,
கவிதா பாண்டே:

நான், சென்னையை சேர்ந்த குடும்ப தலைவி. பள்ளிகள் திறக்கவிருக்கும் இச்சமயத்தில், 'டோரா பொம்மை போட்ட பை தான் வேண்டும்; அந்த ரோஸ் கலர் பாட்டில் தான் வேண்டும்' என, குழந்தைகள் விரும்பி கேட்டால், பெற்றோரால் மறுக்க முடியாது.இதை நன்றாக புரிந்து கொண்ட வியாபாரி கள், அதிக விலை வைத்து விற்க தயங்குவதே இல்லை. 'இப்பொருட்களை வாங்கி தந்தால், பிள்ளைகள் நன்றாக படிப்பர்; அவர்களின் கற்பனை சக்தி வளரும்' என, பெற்றோர் நம்புகின்றனர்.இது போன்ற பொருட்களை வாங்கி தருவதால் மட்டும் புத்திசாலித்தனமும், படைப்பாற்றலும் குழந்தைகளிடம் வளர்ந்து விடாது. ஏனெனில், படைப்பாற்றல் என்பது, இயற்கையாக உருவாக கூடிய விஷயம். அதிகமான வாசிப்பு, சரியான சூழல் சார்ந்த விஷயங்கள் தான், குழந்தைகளை திறமை உள்ளவர்களாக மாற்றும். வேண்டுமானால், குழந்தைகளின் திறமையை வளர்க்கும் பொருட்களை வாங்கி தரலாம்.என் குழந்தையுடன் படிக்கும் குழந்தைகளின் பெற்றோரை, எனக்கு நன்றாக தெரியும். இதனால், மூன்று நான்கு பெற்றோர் ஒன்றாக சேர்ந்து, குழந்தைகளுக்கு தேவையான பொருட்களை சென்னை, பாரிமுனையில் உள்ள, மொத்த விற்பனை கடைகளில் வாங்குவோம்.இப்படி மொத்தமாக சேர்ந்து வாங்கினால், 2,000 ரூபாய் மதிப்புள்ள பொருட்களை, 1,500 ரூபாய்க்கே வாங்கலாம். வசதியற்றவர்கள், இம்முறையை பின்பற்றலாம். மேலும், கடைக்கு போகும் முன்பே, என்னென்ன பொருட்கள் வாங்க போகிறோம் என்பதை முன்கூட்டியே, 'லிஸ்ட்' தயாரித்து எடுத்து செல்லலாம்.குழந்தைகளுக்கு சேமிக்க கற்று தந்து, அப்பணத்தில் பொருட்களை வாங்க செய்வேன். இப்படி செய்யும் போது, அவர்களின் பணத்தில் வாங்கிய பொருள் என்பதால், அதைப் பொறுப்பாக வைத்திருப்பர். மேலும், குழந்தைகள் நான்கு பொருட்கள் கேட்டால், நான் ஒரே ஒரு பொருள் வாங்கிக் கொள்வதற்கான, 'ஆப்ஷன்' கொடுப்பேன்.இப்படி செய்யும் போது, அவசியம் எது தேவை என்பதை, அவர்களே தெரிந்து கொள்வர். இதில், ஓரிரு முறை தவறு செய்தாலும், அடுத்தமுறை சரியானதை தேர்வு செய்வர். இதனால், குழந்தைகளே செலவை குறைக்க கற்றுக் கொள்வர்.தற்போது எல்லா பள்ளிகளிலும், 'கிராப்டு'க்கு தேவையான பொருட்களை அடிக்கடி வாங்க சொல்வர். இதற்கு, வீட்டு அருகில் ரெகுலராக ஒரு கடையில் வாங்குவது நல்லது. குழந்தைகள் தங்களுக்கு தேவையான பொருட்களை அவர்களே வாங்கிக் கொள்ள முடியும். இதனால், குழந்தைகளிடம் தன்னம்பிக்கை அதிகரித்து, புத்திசாலித்தனமாக நடப்பர்

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...