மாணவர்கள் கல்வித்தரம் பாதிப்பு: மாறுதலை விரும்பும் ஆசிரியர்கள்

: கீழ்மலை பகுதிகளில் பணியாற்றுவதற்காக அனுப்பி வைக்கப்படும் அரசு பள்ளி ஆசிரியர்கள் ஏதாவது ஒரு காரணத்தை
கூறி இடமாற்றம் பெறுவதால் , மாணவர்களின் கல்வித் தரம் பாதிக்கப்பட்டுள்ளது. துவக்கப்பள்ளியிலிருந்து மேல்நிலை வரை மலைப்பகுதிகளில் பள்ளிகள் உள்ளன. இங்கு பணிபுரியும் ஆசிரியர்களில் பெரும்பாலானவர்கள் நகர் பகுதிகளை சேர்ந்தவர்கள். குறிப்பிட்ட சில மாதங்கள் வரை பணியாற்றும் அவர்கள், ஏதாவது ஒரு காரணத்தை கூறி தாங்கள் விரும்பிய இடத்திற்கு மாறுதல் பெறுகின்றனர். அல்லது இடமாறுதல் கிடைக்கும் வரை அனுமதிக்கப்பட்ட விடுப்பில் சென்று விடுகின்றனர். காலியிடத்திற்கு மீண்டும் புதிய ஆசிரியர்கள் நியமிக்கும் வரை மாணவர்கள் காத்திருக்க வேண்டியுள்ளது. கூடுதல் பொறுப்பேற்கும் ஆசிரியர்களாலும் திறம்பட பாடங்களை நடத்த முடியாமல் திணறுகின்றனர். இதனால் பண்ணைக்காடு அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் கடந்த பல ஆண்டுகளாக குறைந்து கொண்டே வருவது பெற்றோர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மலைப்பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை கல்வித்துறையினர் விரைவில் நிரப்புவதோடு, அர்ப்பண உணர்வு மற்றும் விருப்பம் உள்ள ஆசிரியர்களை தேர்வு செய்ய முன்வர வேண்டும் என்று பெற்றோர்களும், மாணவர்களும் எதிர்பார்க்கின்றனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...