மறுமதிப்பீட்டின்போது மதிப்பெண் குறையவும்
வாய்ப்பிருப்பதால் மாணவர்கள் தங்களது பாட
ஆசிரியர்களுடன் ஆலோசித்த பிறகே மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
விடைத்தாள் மறுமதிப்பீட்டில் மொத்த விடைத்தாளையும் மூன்று மூத்த ஆசிரியர்கள் கொண்ட குழு மறுமதிப்பீடு செய்யும். இந்தக் குழுவுக்கு ஏற்கெனவே வழங்கப்பட்ட மதிப்பெண்ணை குறைக்கவோ, அதிகரித்து வழங்கவோ அதிகாரம் உண்டு.
எனவே, ஏதேனும் ஒரு கேள்விக்கு மதிப்பெண் அதிகரிப்பதை மட்டும் மனதில் வைத்து மறுமதிப்பீடு கோரக் கூடாது. மற்ற கேள்விகளுக்கான விடைகள் அனைத்தும் சரியாக உள்ளனவா, அவற்றுக்கான மதிப்பெண் குறைய வாய்ப்புள்ளதா என்பதைப் பார்க்க வேண்டும். மதிப்பெண் அதிகரிக்க வாய்ப்பிருந்தால் மட்டுமே மறுமதிப்பீடு கோர வேண்டும் என அவர்கள் தெரிவித்தனர்.
மறுமதிப்பீட்டில் மதிப்பெண்ணில் மாறுதல் இருக்கும் மாணவர்களுக்கு புதிதாக மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்படும். மறுகூட்டலின்போது மதிப்பெண் அதிகரித்தால் மட்டுமே புதிய மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும். மதிப்பெண் குறைந்தால், அவர்களுக்கு பழைய மதிப்பெண்ணே வழங்கப்படும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் ஏற்கெனவே அறிவித்துள்ளது.