கர்நாடகாவில் ஆசிரியர் பட்டய படிப்பு: சான்றிதழ்களை பரிசீலிக்க ஐகோர்ட் உத்தரவு

கர்நாடகாவில் 2008-09ல் ஆசிரியர் பட்டய படிப்பு சேர்ந்தவர்களின் சான்றிதழ்களை பரிசீலிக்குமாறு தமிழக அரசுக்கு
சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் பெங்களூரு, கோலார் மாவட்டத்தில் உள்ள ஆசிரியர் பட்டயப் படிப்பு கல்லூரிகளில் படித்த 10 பேர் தாக்கல் செய்த மனுக்களில் கூறியிருப்பதாவது:
நாங்கள் 2008 - 09ல் ஆசிரியர் பட்டயப் படிப்பில் சேர்ந்தோம். முதலாம் ஆண்டு முடித்து, இரண்டாம் ஆண்டு தேர்வு எழுத போகும்போது, தமிழக பள்ளி கல்வித் துறை பிறப்பித்த உத்தரவு பற்றி எங்களுக்கு தகவல் கிடைத்தது. கடந்த 2009 டிசம்பரில் பள்ளி கல்வித் துறை பிறப்பித்த உத்தரவில் 2008 - 09ல் இருந்து கர்நாடகாவில் பெறும் ஆசிரியர் பட்டயப் படிப்புக்கான சான்றிதழ்களை பரிசீலிக்க மாட்டோம். ஏனென்றால், தமிழக அரசு ஆசிரியர் பட்டயப் படிப்புக்கான பாடத் திட்டத்தை மாற்றி 2008 - 09 முதல் அமல்படுத்தி உள்ளது&'என, கூறப்பட்டுள்ளது.
 இந்த உத்தரவால், நாங்கள் பாதிக்கப்படுகிறோம். ஏற்கனவே, முதலாம் ஆண்டு முடித்து விட்டு, இரண்டாம் ஆண்டு தேர்வு எழுத போகிறோம். எனவே, எங்களைப் பொறுத்தவரை தமிழக அரசின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு, மனுக்களில் கூறப்பட்டு உள்ளது.
மனுதாரர்கள் சார்பில், வழக்கறிஞர் ஆர்.சுரேஷ்குமார், "2009 டிசம்பரில் அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இந்த உத்தரவு 2008ல் கர்நாடகாவில் சேர்ந்த மாணவர்களுக்கு பொருந்தும் விதத்தில் உள்ளது. மனுதாரர்களின் சான்றிதழ்களை பரிசீலித்து, தமிழக அரசின் பட்டயப் படிப்புக்கு இணையாக கருத வேண்டும்" என்றார்.
அறிமுகம்
அரசு தரப்பில், கூடுதல் அட்வகேட் - ஜெனரல் கோமதிநாயகம், "தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ள பாடத் திட்டத்துக்கும், கர்நாடகாவின் பாடத் திட்டத்துக்கும் இடையே வேறுபாடு உள்ளது. மற்ற மாநிலங்களில் இருந்து, ஆசிரியர் பட்டய படிப்பு முடித்தவர்களை தமிழகத்தில் வழங்கப்படும் கல்வி தரத்துக்கு இணையாக கருத முடியாது. தரமான கல்விக்காக தான், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது"
என்றார்.
மனுக்களை விசாரித்த, நீதிபதி ராஜா பிறப்பித்த உத்தரவு: அரசு பிறப்பித்த உத்தரவின் நோக்கத்தை கேள்வி கேட்க முடியாது. 2009 டிசம்பரில் பிறப்பிக்கப்பட்ட அரசாணையில் இந்த கோர்ட் உடன்படுகிறது; இந்த அரசாணை செல்லும். இருந்தாலும் 2009 டிசம்பரில் அரசாணை பிறப்பிக்கப்பட்டதால் 2008 - 09க்கு பின் மற்ற மாநிலங்களில் பெறப்பட்ட ஆசிரியர் பட்டயப் படிப்பு சான்றிதழ்களை பரிசீலிக்க மாட்டோம்" என்பதை ஏற்க முடியாது.
எட்டு மாதங்களில்...
கடந்த, 2009ல் அரசாணை பிறப்பிக்கப்பட்ட போது மனுதாரர்கள் அனைவரும் முதலாம் ஆண்டு முடித்து விட்டனர். அதன்பின், எட்டு மாதங்களில் சான்றிதழும் பெற்று விட்டனர். இந்த அரசாணையை 2008ல் இருந்து அமல்படுத்துவதால், மனுதாரர்களின் உரிமைகள் பாதிக்கப்படுகின்றன. மனுதாரர்கள் பெற்ற ஆசிரியர் பட்டயப்படிப்பு சான்றிதழ்கள், தமிழக அரசின் பட்டயப் படிப்புக்கு இணையானதா, இல்லையா என்பதை ஆசிரியர் கல்வி இயக்குனரகம் பரிசீலிக்க வேண்டும். இவ்வாறு, நீதிபதி ராஜா உத்தரவிட்டு உள்ளார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...