முறைகேடாக மாணவர் சேர்க்கை: தடை செய்யக் கோரி போராட்டம்

டி.டி. மருத்துவக் கல்லூரியில் 2014-15-ஆம் ஆண்டுக்காக முறைகேடாக நடைபெறும் மாணவர் சேர்க்கையை தடை
செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மருத்துவ மாணவர்கள் சனிக்கிழமை கல்லூரியில் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தினர்.
திருவள்ளூர் - திருத்தணி நெடுஞ்சாலையில் குன்னவலம் கிராமத்தில் இயங்கி வரும் டி.டி. மருத்துவக் கல்லூரி மாணவர்கள் வியாழக்கிழமை கல்லூரி வளாகத்தில் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தினர்.
அப்போது போராட்டம் குறித்து அவர்கள் கூறுகையில், "இந்த கல்லூரியில் 2011-12, 2012-13-ஆம் ஆண்டுகளில் இக்கல்லூரியில் சேர்ந்த நாங்கள் முறையான அங்கீகாரம் இல்லை எனத் தெரிய வந்ததும் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தினோம்.
இதைத் தொடர்ந்து சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத் செயலர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் இந்த ஆண்டில் எங்களுக்கு அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம் தருவதாக உத்தரவாதம் அளித்துள்ளனர்.
இந்நிலையில் மீண்டும் இக்கல்லூரியில் 2014-15-ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை முறைகேடாக நடைபெறுகிறது.
எதிர்காலத்தில் எங்களைப் போல் அவர்களும் பாதிக்கப்படக் கூடாது. எனவே அரசும், காவல்துறையினரும் உரிய நடவடிக்கை எடுத்து முறைகேடாக நடைபெறும் மாணவர் சேர்க்கையை தடுக்க வேண்டும்' என கூறினர்.
நிர்வாகத்துக்கு ஆதரவாக செயல்படுவதாக கூறி பாலுசெட்டிசத்திரம் இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்திய புகார் மனுவை மாணவர்களுடன் பேச்சு வார்த்தைக்கு வந்த ஏடிஎஸ்பி ராமேஸ்வரியிடம் கொடுத்தனர்.
நிருபர்களிடம் தகராறு: டி.டி.மருத்துவக் கல்லூரியின் மாணவர்கள் உள்ளிருப்புப் போராட்டம் குறித்து செய்தி சேகரிக்கச் சென்ற நிருபர்கள் மற்றும் புகைப்படக்காரர்களிடம் இன்ஸ்பெக்டர் தகராறில் ஈடுபட்டார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...