பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முதன்மை கல்வி அலுவலகத்தில் மனு

அரசு பள்ளிகளில், மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, ஆசிரியர் நியமிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட
கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் முதன்மை கல்வி அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டது.
அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தினர் (ஏ.ஐ.ஒய்.எப்.) கல்வி தொடர்பான கோரிக்கைகளை வலியுறுத்தி, ஊர்வலமாக சென்று முதன்மை கல்வி அலுவலகத்தில் மனு கொடுத்தனர். திருப்பூர் தாராபுரம் ரோடு, ஏ.ஐ.டி.யு.சி. அலுவலகம் முன் துவங்கிய ஊர்வலம், தாராபுரம் ரோடு, கே.எஸ்.சி. பள்ளி ரோடு வழியாக, முதன்மை கல்வி அலுவலகத்தை சென்றடைந்தது. மாவட்ட தலைவர் மூர்த்தி, செயலாளர் ரவி உள்ளிட்ட நிர்வாகிகள் முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளரிடம் மனு கொடுத்தனர்.
அதன் விவரம்: தனியார் பள்ளிகளில் கட்டணம் வாங்காமல் 25 சதவீத ஏழை குழந்தைகளை சேர்க்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. தனியாக அலுவலர் நியமித்து 25 சதவீத கல்வி ஒதுக்கீட்டை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு உத்தரவை செயல்படுத்தாத பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தாழ்த்தப்பட்ட பழங்குடியின மாணவர்கள் தனியார் பள்ளிகளில் பயிலும் கட்டணத்தை அரசே செலுத்தும் என்ற அரசா ணையை (எண்: 92) மூன்று ஆண்டுகளாக செயல்படுத்தவில்லை; அரசாணையை விரைந்து செயல்படுத்த வேண்டும்.
அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தை மட்டும் வசூலிக்கச் செய்ய வேண்டும். அரசு பள்ளிகளில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், கழிப்பிடம் மற்றும் போதுமான வகுப்பறை வசதியை ஏற்படுத்துவதுடன், மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...