பள்ளிகள் இன்று திறப்பு

கோடை விடுமுறைக்குப் பிறகு தமிழகம் முழுவதும் பள்ளிகள் திங்கள்கிழமை (ஜூன் 2) திறக்கப்படுகின்றன.

 பள்ளிக் கல்வித் துறையின் கீழ் உள்ள பள்ளிகளுக்கு ஏப்ரல் 23 முதலும், தொடக்கக் கல்வித் துறையின் கீழ் உள்ள பள்ளிகளுக்கு மே 1 முதலும் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டது.
 கோடை வெப்பம் கடுமையாக இருப்பதால் பள்ளிகள் திறக்கும் தேதி தள்ளிவைக்கப்படும் என எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், ஏற்கெனவே திட்டமிட்டபடி, ஜூன் 2-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக் கல்வி இயக்ககம் அறிவித்தது.  அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இலவசப் புத்தகங்கள், சீருடைகள், நோட்டுப்புத்தகங்கள் அந்தந்த பள்ளிகளுக்கு அனுப்பும் பணி ஏற்கெனவே நிறைவடைந்துள்ளது.
 பள்ளித் திறக்கும் நாளில் இந்தப் பொருள்கள் மாணவர்களுக்கு விநியோகிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...