தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் சார்பில் தங்களது 25 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் நோக்கில் கன்னியாகுமரியிலிருந்து சென்னை வரையிலான நடை பயணத்தை ஆகஸ்ட்.3 -ம் தொடங்கவுள்ள நிலையில் இதைத்தவிர்க்க தமிழக முதல்வர் உரிய நடவடிக்கை எடுக்க
வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.
இது குறித்து அச்சங்கத்தின் புதுக்கோட்டை மாவட்ட முன்னாள் தலைவர் அ.ஜனார்தனம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது :
தமிழக அரசின் கீழ் பணியாற்றும் பணியாளர்கள் தங்களது கோரிக்கைகளைத் தெரிவிப்பதற்கும், அரசு இயந்திரம் சிறப்பாகச் செயல்படுவதற்கு உரிய ஆலோசனைகளை வழங்கிடவும் , தமிழக அரசு சுமார் முப்பது பொது மற்றும் துறை வாரி சங்கங்களுக்கு அங்கீகாரம் அளித்துள்ளது. இந்த அங்கீகரிக்கப்பட்ட சங்கங்கள் அவ்வப்போது அரசு சிறப்பாக நடைபெறுவதற்கு நல் ஆலோசனைகளை வழங்குவதோடு, தங்கள் உறுப்பினர்களின் பணி சார்ந்த கோரிக்கைகளை முதல்வரிடம் மனுக்கள் வாயிலாகத் தெரிவித்து வருகின்றனர். அந்த கோரிக்கைகள் சம்பந்தப்பட்ட அரசுத் துறை மூலமாக பரிசீலனைக்குப் பின்னர் உரிய ஆணைகளைப் பிறப்பித்து வருவது வழக்கமான நிகழ்வாகும்.
தற்போதுள்ள அதிமுக தலைமையிலான அரசு பதவி ஏற்ற பின்னர் இதுவரையில் எந்த ஒரு அங்கீகரிக்கப்பட்ட சங்கங்களையும் அழைத்துப் பேசியதாகத் தெரியவில்லை. இந்நிலையில் 1924 முதல் ஆங்கிலேயர் காலம் தொடங்கி இன்றளவும் தொடர்ந்து தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட, சுமார் பதினான்கு லட்சம் அரசு அலுவலர்களைக் கொண்டும் 177 துறைவாரிச் சங்கங்களை தங்களின் இணைப்புச் சங்கங்களாகக் கொண்டு செயல்பட்டு வருகின்ற மிகப் பெரிய பொது சங்கமான தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் தங்களது 25 அம்சக் கோரிக்கைகளை (தமிழக முதல்வர் தனது தேர்தல் பிரச்சார அறிக்கையில் தெரிவித்த 2004க்குப் பிறகு பணி நியமனம் செய்யப்பட்ட அரசு அலுவலர்கள் ஆசிரியர்களக்கு அறிமுகப்படுத்தப்பட்ட பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தினை இரத்து செய்து பழைய ஓய்வூதியத்தட்டத்தினை அமுல்படுத்துவது என்ற கோரிக்கை , தமிழக அரசின் சார்பில் தலைமைச் செயலாளர் தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட சங்கங்களை அழைத்து கூட்டு மன்றக் கூட்டம் நடத்தப்பட வேண்டும்.
தமிழக அரசில் பணி புரியும் அரசு அலுவலர், ஆசிரியர்களுக்கு தொழில் வரி இரத்து செய்யப்பட வேண்டும், அரசு அலுவலர் ஆசீரியர்களுக்கு குடும்பப் பாது காப்பு நிதி ரூ 1. 5 லட்சத்திலிருந்து ரூ 5 லட்சமாக உயர்த்தப்பட வேண்டும், அரசின் அனைத்து துறைகளிலும் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்பிட வேண்டும், அரசு அலுவலர்கள் ஓய்வு பெறும் நாளில் பணி நீக்கம் செய்யப்படக் கூடாது என வெளியிடப்பட்ட அரசாணை 144 -ஐ நடைமுறைப்படுத்தவேண்டும், சத்துணவு, அங்கண்வாடி , மற்றும் ஊராட்சிச் செயலாளர்களுக்கு கால முறை ஊதியம் வழங்கப்படவேண்டும், தொகுப்பூதியம், தினக்கூலி, பகுதி நேரப் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்யவேண்டும்,
டாஸ்மாக் -ல் பணியாற்றும் அனைத்து விற்பனையாளர்கள், மேற்பார்வையாளர்கள் அனைவரையும் தமிழ்நாடு மாநில வாணிபக் கழகப் பணியாளர்களாக அறிவிக்கவேண்டும் என்பன கோரிக்கைகளை, ஒவ்வொரு மாநில செயற்குழுக் கூட்டத்திலும் தீர்மானங்கள் இயற்றி அந்த தீர்மானங்களை தமிழக தலைமைச் செயலாளருக்கு அனுப்பிவைத்து தமிழக முதல்வரின் கவனத்திற்குக் கொண்டு சென்று , இக்கோரிக்கைகள் தொடர்பாக பேச்சு வார்த்தை நடத்திடக் கோரி பல முறை மனுக்கள் அளித்தும் தமிழக அரசு பேச்சுவார்த்தைக்கு இணங்காத சூழ்நிலையில் அரசு அலுவலர்கள் ஐந்து கட்டப் போராட்டத்தை செயல்படுத்த தீர்மானித்தனர். அதன்படி, முதலாவதாக சென்ற 20.1.2014 முதல் 31.1.2014 முடிய கவன ஈர்ப்பு பிரச்சாரப் பயணம் நடைபெற்றது, இரண்டாவதாக முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் 3.2. 2014 முதல் 14.2.2014 வரை அரசு அலுவலர்கள் அனைவரும் 25 அம்சக் கோரிக்கை அட்டை அணிந்து பணியை மேற்கொண்டனர்.
மூன்றாவதாக 25 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் 19.2.2014 -ல் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.நான்காவதாக கவன ஈர்ப்பு நடைபயணத்திற்கான ஆயத்த மாநாடுகள் 8.6,2014 -ல் திருநெல்வேலியிலும் 14.6. 2014 -ல் ஈரோட்டிலும், 21.6.2014 -ல திருச்சியிலும், 28.06.2014 -ல் வேலூரிலும் நடத்தப்பட்டன. நான்கு வகையான போராட்டங்களுக்கும் அரசு செவிசாய்க்காத சூழ்நிலையில், ஐந்தாம் கட்ட போராட்டமாக, தமிழக முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் நோக்கில் வரும் 1.8.2014 -ல் கன்னியாகுமரி, காந்தி மண்டபத்திலிருந்து நடைபயணம் தொடங்கி பல் வேறு மாவட்டங்கள் வழியாக 25. 8. 2014 அன்று சென்னையில் நடைபயணத்தை முடிப்பது எனத் தீர்மானித்துள்ளனர்.
தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் 25 அம்சக் கோரிக்கைகளை தமிழக முதல்வரின் கவனத்தினை ஈர்ப்பதற்காக இந்த நடைபயணத்தை அறிவித்துள்ளது. தமிழக அரசால் அங்கீரிக்கப்பட்ட சங்கங்களை அழைத்து அவர்களின் குறைகளைக் கேட்டறிந்து உரிய நடவடிக்கை மேற்கொள்வது அரசின் கடமை. அரசின் கவனத்தை ஈர்ப்பதற்காக இப்படிப்பட்ட போராட்டங்களை தவிர்க்கும் வகையில் சங்க நிர்வாகிகளை அழைத்து பேச்சு வார்த்தை நடத்த வேண்டும்.எனவே தமிழக முதல்வர் இப்பிரச்சினையைத் தீர்க்க சிறிது நேரத்தை ஒதுக்கி, அவர்களின் கோரிக்கைகளைப் பெற்று உரிய பரிசீலனை மேற்கொள்ளப்படும் என்ற அறிவிப்பினை வெளியிட்டாலே, நடைபயணம் போன்ற போராட்டங்கள் தவிர்க்கப்படும் என அதில் தெரிவித்துள்ளார்.