முல்லை பெரியாறு நீர்மட்டம் 142 அடியாக உயர்கிறது: உச்ச நீதிமன்ற உத்தரவு அமல்

முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உச்ச நீதிமன்ற உத்தரவிற்கு இணங்க 136 அடியில் இருந்து 142 அடியாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தமிழகம் – கேரளா எல்லையில் உள்ள முல்லை பெரியாறு
அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்திக்கொள்ள உச்ச நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது.

மேலும் அணையின் பாதுகாப்பு மற்றும் நீர்மட்டத்தை உயர்த்துவது குறித்து கண்காணிக்க தமிழகம், கேரளம், மத்திய அரசு சார்பில் 3 பேர் கொண்ட ஆய்வுக்குழு அமைக்கப்பட்டது.

இந்நிலையில், உச்ச நீதிமன்றம் அமைத்த ஆய்வுக் குழுவினர் இன்று முல்லைப் பெரியாறு அணையில் ஆய்வு மேற்கொண்டனர். ஷட்டர் பகுதி, அணையின் உள்பக்கம், பேபி டேம் ஆகியவற்றிலும் ஆய்வு மேற்கொண்டதாக தெரிகிறது.

உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி அளவுக்கு நீர் தேக்கும் பணியை துவக்கினர்.

இதனையடுத்து, முல்லை பெரியாறு அணையில் 142 அடிக்கு நீர் தேக்கி வைக்கும் பணி தொடங்கியது. முதற்கட்டமாக, தமிழக பொதுப்பணித் துறை அதிகாரிகள், அணையில் உள்ள 13 மதகுகளின் கதவுகளை கீழ் இறக்கினர்.

இவற்றின் வழியே தான் முல்லைப் பெரியாறு அணையில் இருந்து உபரி நீர் திறந்துவிடப்பட்டு வந்தது. இவை அடைக்கப்பட்டால், அணையில் நீர்மட்டம் 142 அடிக்கு உயர்ந்துவிடும். 36 ஆண்டுகளுக்குப் பின் அணையில் உள்ள 13 மதகுகளின் கதவுகளும் கீழிறக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

வழக்கு பின்னணி:

கேரளாவில் உள்ள முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த 2006-ம் ஆண்டு பிப்ரவரியில் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை மீறி, அதே ஆண்டு மார்ச் 18-ம் தேதி கேரள சட்டசபையில், முல்லைப் பெரியாறு அணையின் அதிகபட்ச உயரத்தை 136 அடியாக நிர்ணயித்து சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதை எதிர்த்து தமிழக அரசு தொடர்ந்த வழக்கை உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு விசாரித்தது.

தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா, நீதிபதிகள் ஹெச்.எல்.தத்து, சந்திரமவுலி பிரசாத், மதன் லோக்கூர், எம்.ஒய்.இக்பால் அடங்கிய அமர்வு கேரள அரசின் சட்டத்தை ரத்து செய்தது. நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த அனுமதித்ததுடன், அணை நிர்வாகத்தை ஏற்க மூன்று பேர் கொண்ட குழுவையும் அமைத்து கடந்த மே 7-ம் தேதி உத்தரவிடப்பட்டது

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...