கடலூர் மாவட்டத்தில், பள்ளி செல்லா, பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் 485 பேர் என, கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.
தமிழக அரசு அனைவரும் கல்வி கற்க வேண்டும் என்ற
அடிப்படையில் கல்வித் துறையில் இலவச பாடப் புத்தகம், சைக்கிள், மடிக்கணினி உட்பட 14 வகையான சலுகைகள் வழங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் மாவட்டம் வாரியாக அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல், 14 வயது வரை பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடை நின்ற மாணவ, மாணவிகளை நேரிடையாகச் சென்று கணக்கெடுத்து அவர்களை பள்ளிக்கு அனுப்ப அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
மாவட்டத்தில், அண்ணாகிராமம், புவனகிரி, கடலூர், கம்மாபுரம், காட்டுமன்னார்கோவில், கீரப்பாளையம், குமராட்சி உட்பட 14 வட்டாரங்களில் உள்ள, பஞ்சாயத்து, பேரூராட்சி, நகராட்சிக்குட்பட்ட 2,833 குடியிருப்பு பகுதிகள், செங்கல் சூளை, கட்டடப் பணி, சாலைப் பணி, உணவு விடுதி உள்ளிட்ட இடங்களில் ஏப்ரல், மே, ஜூன் மாதம் வரை கணக்கெடுக்கப்பட்டது.
இதில், 299 மாணவர்கள், 186 மாணவிகள் என, மொத்தம் 485 பேர் பள்ளி செல்லா, பள்ளியை விட்டு இடை நின்றவர்கள் என தெரியவந்துள்ளது. இப்பணியில் சிறப்பாசிரியர்கள் ஈடுபட்டனர்.
இதுகுறித்து அனைவருக்கும் கல்வி இயக்க அதிகாரி ஒருவர் கூறுகையில், "இந்த மாணவ, மாணவிகளுக்கு அனைவருக்கும் கட்டாய இலவச கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் வயதுக்கேற்ற வகுப்பில் சேர்க்கப்பட்டு சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. கணக்கெடுப்பு தொடர்ந்து நடத்தப்படும்.குறுகிய காலத்தில் பள்ளியை விட்டு இடைநின்ற 6, 7 மற்றும் 8ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு குறுகிய கால இணைப்பு மையம் மூலமும், மூன்று மாதங்களுக்கு மேல் பள்ளியை விட்டு இடை நின்றவர்களுக்கு நீண்ட கால இணைப்பு மையம் மூலமும் பயிற்சி அளிக்கப்படுகிறது.
இதுவரை பள்ளி செல்லாத, நீண்ட காலம் பள்ளியை விட்டு இடைநின்ற, புலம் பெயர்ந்த, தெருவோரக் குழந்தைகள், நாடோடிக் குழந்தைகள், நரிக் குறவர் இன குழந்தைகள் ஆகியோருக்கும், உண்டு உறைவிட மையம் மூலம் சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. மாணவர்கள் தொடர்ந்து சிறப்பு பயிற்சி பெறுகிறார்களா என, கண்காணிக்கப்படும்" என்றார்.