பள்ளி மாணவ மாணவியருக்கு உளவியல் ரீதியாக ஆலோசனை வழங்கும் மொபைல் கவுன்சிலிங் வேன்" தற்போது ஈரோடு மாவட்டத்தில் பவானி, அந்தியூர் தாலுகாவில் உள்ள பள்ளிகளில் ஆலோசனை வழங்கி வருகிறது.
நகர்ப்புற, கிராமப்புற வேறுபாடின்றி மாணவ மாணவியர் குடும்ப பிரச்னையை வெளியே சொல்ல முடியாமலும், படிப்பில் கவனம் செலுத்த முடியாமலும் சிரமப்படுகின்றனர்.
மன அழுத்தத்தால் பாதிக்கப்படுவதால் சிறு வயதிலேயே பல்வேறு பிரச்னைகளை சந்திக்கும் மாணவர்களின் எதிர்காலமே, கேள்விக்குறியாகும் சூழ்நிலை ஏற்படுகிறது. எனவே பள்ளிகளிலேயே மாணவ மாணவியரின் குடும்ப மற்றும் சொந்த பிரச்னைகளுக்கு உரிய ஆலோசனை வழங்கும் வகையில் கடந்தாண்டு நடமாடும் வாகனம் மூலம் ஒவ்வொரு பள்ளியாக சென்று சிகிச்சையளிக்கும் வசதி தமிழக அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது. ஈரோடு மாவட்டத்தில் தற்போது கிராமப்புற பகுதிகளில் இந்த வாகனம் உளவியல் ஆலோசனை பணிகளை செய்து வருகிறது. இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அய்யண்ணன் கூறியதாவது: நாமக்கல், சேலம், ஈரோடு என, மூன்று மாவட்டத்துக்கு ஒரு நடமாடும் உளவியல் ஆலோசனை வாகனம் மூலம் கவுன்சலிங் வழங்கப்படுகிறது. 15 நாட்களுக்கு ஒரு முறை தினமும் இரண்டு பள்ளிகளுக்கு சுழற்சி முறையில் மாணவ மாணவியருக்கு ஆலோசனை வழங்கப்படுகிறது. தற்போது மை லம்பாடி, ஒலகடம் அரசு பள்ளிகள், அந்தியூர் மகளிர், ஆண்கள் அரசு பள்ளி, சிங்கம்பேட்டை, பவானி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட கிராமப்புற பள்ளிகளை சேர்ந்த மாணவ மாணவியருக்கு உளவியல் ஆலோசனை வழங்கப்படுகிறது. இரண்டு மாதத்துக்குப்பின் ஈரோடு பகுதி பள்ளிகளில் சுழற்சி முறையில் கவுன்சலிங் அளிக்கப்படும். இந்த மொபைல் வாகனத்தில் ஒரு உளவியல் ஆலோசகர், உதவியாளர், டிரைவர் என மூன்று பேர் இருப்பர். தங்களது பிரச்னைகளை பொது இடத்தில் கூறுவதற்கு, சில மாணவர்கள் சங்கடமாக உணர்கின்றனர். அவர்களை வாகனத்துக்கு உள்ளே அமர வைத்து மனவியல் ஆலோசகர் பிரச்னைகளை கேட்டறிந்து, அதற்கேற்ப ஆலோசனை வழங்குவார். இதன் மூலம் மாணவ மாணவியர் எதிர்கால வாழ்க்கை பிரகாசமாக இருக்கும் என்பதோடு, கல்வியிலும் நல்ல முன்னேற்றத்தை காண முடிகிறது. இவ்வாறு அவர் கூறினார்.