சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் சம்ஸ்கிருத வார விழா கொண்டாட வலியுறுத்தி அனுப்பப்பட்ட சுற்றறிக்கையை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்த பொது நல மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இது தொடர்பாக வழக்குரைஞர் பி.புகழேந்தி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விவரம்:
சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் ஆகஸ்ட் 7-ஆம் தேதி முதல் 13-ஆம் தேதி வரை சம்ஸ்கிருத வார விழா கொண்டாடுமாறு, மத்திய அரசு கடந்த மாதம் 30-ஆம் தேதி ஒரு சுற்றறிக்கை அனுப்பியது.
இந்திய அரசியல் அமைப்பு சட்டப்பிரிவின் 8-ஆவது அட்டவணையில் உள்ள 22 மொழிகளில் ஒரு மொழி சம்ஸ்கிருதம். சம்ஸ்கிருத மொழிக்கென அதில் எந்த ஒரு தனி அந்தஸ்தும் வழங்கப்படவில்லை. அதே போன்று, சம்ஸ்கிருத மொழியைப் போல் தமிழ் மொழியும் தொன்மையானதே. எனவே, சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் சமஸ்கிருத வாரம் கொண்டாடுமாறு அனுப்பப்பட்ட சுற்றறிக்கையை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டது. இந்த மனு தலைமை நீதிபதி எஸ்.கே.கெüல், நீதிபதி எம்.சத்தியநாராயணன் ஆகியோர் அடங்கிய முதல் அமர்வு முன்பு புதன்கிழமை (ஜூலை 30) விசராணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வழக்குரைஞர் எம்.ராதாகிருஷ்ணன் ஆஜரானார். விசாரணைக்குப் பிறகு நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: மனுதாரர் வாதத்தில் எந்தத் தகுதியும் இல்லை. பல்வேறு மொழிகளில் ஒன்றான சம்ஸ்கிருத மொழியை ஊக்குவிப்பதற்காக அந்த சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இதுவரை இதர மொழிகளை ஊக்குவிப்பதற்காக எடுத்த முயற்சியை இது பாதிக்காது. அதே நேரத்தில் தமிழ் மொழியின் பாரம்பரியத்தையும், பெருமையையும் இது குறைக்காது. எங்களது பார்வையில், சம்ஸ்கிருத மொழியை ஊக்குவிப்பதற்காக சோதனை அடிப்படையில் இந்த முறையை கையாண்டிருக்கலாம். இதில், நீதிமன்றம் தலையிடுவது சரியானதாக இருக்காது. எனவே, இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.