"படிப்பதில் போர் வீரன் போல மாணவர்கள் இருக்க வேண்டும்"

 திண்டுக்கல் மாவட்டம் எரியோடு தண்ணீர்பந்தம்பட்டியில், மூக்காயம்மாள் நினைவு கல்வி அறக்கட்டளை, தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் கோடைச் சங்கமம்
நிகழ்ச்சி நடந்தது.

ராணிப்பேட்டை பெல் நிறுவன முதுநிலை மேலாளர் முகில் தலைமை வகித்தார். அறக்கட்டளை நிர்வாகி பெருமாள் வரவேற்றார். அறிவியல் இயக்க மாநில செயலாளர் தியாகராஜன், மாவட்ட தலைவர் ரவீந்திரன், செயலாளர் வீரய்யா, பொருளாளர் கவுதமன், தாலுகா தலைவர் முருகேசன், செயலாளர் பாலமுருகன், பொருளாளர் குழந்தைரோசிரிஜெகன் முன்னிலை வகித்தனர்.

அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி ஏ.டி.ஜி.பி. சைலேந்திரபாபு பேசியதாவது: பெற்றோர் உழைப்புடன் ஒப்பிடுகையில் மாணவர்கள் படிப்பது எளிதான காரியம் தான். ஏழையாய் பிறப்பது தவறல்ல. ஏழையாய் இறப்பது தான் தவறு. ஏழையை பணக்காரனாக மாற்றும் வல்லமை படைத்தது கல்வி. மாணவர்கள் படிப்பதில் தான் ஒரு போர் வீரன் என தங்களை நினைத்து கொண்டு படிக்க வேண்டும். நிச்சயம் தங்களது இலக்கையும் அடையலாம்.

எனது 29 வது வயதில் திண்டுக்கல் எஸ்.பி. யாக பணிபுரிந்தேன். குறைந்த வயதில் உயரிய பதவி கிடைப்பதற்கு முதல் காரணம் கல்வி, அடுத்தது விடா முயற்சி. சொத்துக்களில் மிகப்பெரியது கல்வி மட்டுமே என்றார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...