பற்றி எரிகிறது பெங்களூரு நகரம்

பெங்களூருவில் உள்ள ஒரு பள்ளியில் 6 வயது பள்ளிக் குழந்தை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் பெற்றோர் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. நகரின் பல்வேறு இடங்களில், கற்பழித்த கயவர்கள் மீது நடவடிக்கை
கோரி, பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பெங்களூரு நகரில் உள்ள விப்ஜியார் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வந்த 6 வயது குழந்தையை, பள்ளி ஊழியர்கள் சிலரே கற்பழித்துள்ளனர். இந்த தகவல் கிடைத்ததும் பள்ளி முன் பெற்றோர்கள் குவிந்தனர். கூட்டம் திரளாக வந்ததை பார்த்து அச்சம் அடைந்த பள்ளி நிர்வாகம் அவசர அவசரமாக பள்ளி கதவுகளை பூட்டியது. இதையடுத்து, ஆத்திரம் அடைந்த பெற்றோர், கதவுகளை உடைத்துக் கொண்டு பள்ளி உள்ளே புகுந்து, நிர்வாகத்தினரை சந்திக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
இது குறித்து பெற்றோர் சிலர் கூறுகையில், 'சில நாட்களுக்கு முன் இந்த கற்பழிப்பு சம்பவம் நடந்துள்ளது. இதை, நிர்வாகம் மறைத்து, குற்றவாளிகளை காப்பாற்றும் முயற்சியில் இறங்கி உள்ளது,' என்று புகார் கூறினர். மேலும், இந்த சம்பவம் குறித்து விசாரித்து வருவதாகவும், குற்றவாளிகள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதி அளித்துள்ளதாகவும் பெற்றோர்கள் கூறினர்.
கற்பழிப்பு சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள பள்ளி நிறுவனர் ருஸ்தம் கேரவல்லா, 'துரதிஷ்டவசமாக இந்த சம்பவம் நடந்துள்ளது. இதில் சம்பந்தப்பட்டவர்களை தூக்கிலிட வேண்டும். நாங்கள் விசாரணை அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து வருகிறோம், குற்றவாளிகளை அடையாளம் காண, சிசி டிவி காட்சிகளை போலீசாரிடம் ஒப்படைத்துள்ளோம். குழந்தைகள் பாதுகாப்பு விஷயத்தில் நாங்கள் சமரசம் செய்து கொள்வதாக இல்லை. இந்த விஷயத்தில் நீதி கிடைக்க வேண்டும் என்பதில் நாங்களும் உறுதியாக இருக்கிறோம். குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள்,' என்றார்.
பெங்களூரு நகர கூடுதல் போலீஸ் கமிஷனர் கமல்பந்த் கூறுகையில், 'கற்பழிப்பு சம்பவம் பள்ளி வளாகத்திற்குள் தான் நடந்துள்ளது. போலீஸ் தேவையான நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த சம்பவத்திற்கு பள்ளி நிர்வாகத்தின் அலட்சியமே காரணம் என்று போலீஸ் கருதுகிறது,' என்றார்.
இந்நிலையில், நகரில் உள்ள பெரும்பாலான பள்ளிகள், தங்கள் குழந்தைகளுக்கு எந்த பாதிப்பு ஏற்பட்டாலும் பள்ளி நிர்வாகத்திற்கு பொறுப்பில்லை என்று கோரும் ஒரு விண்ணப்பத்தில், பெற்றோர் கையெழுத்திட வேண்டும் என வற்புறுத்தின. இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர்கள், பள்ளிகளின் முன் கூடி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனால், ஒட்டு மொத்த பெங்களூரு நகரத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. 

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...