மடிக்கணினி கேட்டு மாணவிகள் முற்றுகை போராட்டம்: அமைச்சர் பரிதவிப்ப

சிவகாசியில் பிளஸ்2 முடித்த மாணவிகளுக்கு அரசின் இலவச லேப் டாப் வழங்க கோரி அமைச்சர்
ராஜேந்திரபாலாஜியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதன் பின் கோஷங்கள் எழுப்பியப்படி அமைச்சர் காரையும் வழி மறித்தனர்.

சிவகாசி இந்து நாடார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 முடித்த மாணவிகளுக்கு அரசின் இலவச லேப்டாபினை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வழக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இதே பள்ளியில் பிளஸ் 2 முடித்த 513 மாணவிகளில் 216 பேருக்கு மட்டுமே லேப்டாப் வழங்குவதாகவும், மீதம் உள்ள 297 மாணவிகளுக்கு லேப் டாப் வழங்கவில்லை என பள்ளி நிர்வாகம் தெரிவித்தது.

ஆத்திரம் அடைந்த மாணவிகள் பள்ளி நுழைவு வாயிலில் உட்கார்ந்து லேப் டாப் வழங்கக் கோரி போராட்டம் நடத்தினர். மாவட்ட கல்வி அலுவலர் ராமச்சந்திரன், "பள்ளி அரசு மானிய பிரிவு வகுப்புகளில் படித்தவர்களுக்கு மட்டும்தான் லேப்டாப் வழங்கப்படும். சுயநிதி பிரிவுகளில் படித்தவர்களுக்கு ஒதுக்கீடு இல்லை" என்றார்.

மாணவிகளோ "எங்களுடன் படித்த ஒரு சிலருக்கு வழங்கப்படுகிறது. எங்களுக்கு வழங்கவில்லை. பள்ளியில் சேரும் போது சுயநிதி பிரிவில் படிக்கிறோம் என எந்த கூடுதல் கட்டணம் செலுத்த வில்லை. லேப் டாப் வழங்கும் வரை போராடுவோம்" என்றனர். இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் போலீசார் மாணவிகளை சமாதானப்படுத் தியும் கலைந்து செல்லவில்லை.

இந்நிலையில் லேப் டாப் வழங்க அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பள்ளிக்கு வந்தார். மாணவிகள் மற்றும் பெற்றோர் அமைச்சரிடம் முறையிட்டனர். அமைச்சர் கூறுகையில், "கடந்த ஆண்டுகளில் 16 மாவட்டங்களில் சுயநிதிபிரிவில் படித்த மாணவர்களுக்கு லேப் டாப் வழங்கியதில் ஆடிட் பிரச்னை ஏற்பட்டுள்ளது. முதல்வரிடம் கூறி தீர்வு காணப்படும்" என்றார்.

மாணவிகள் சமாதானம் அடையாத நிலையில் அமைச்சரும் லேப் டாப் வழங்கும் இடத்திற்கு சென்றார். அப்போது மாணவிகள் கூச்சலிட்டனர். விழா நடக்கும் இடத்திற்கும் முன்னேறினர். போலீசார் தடுத்து நிறுத்தினர். பத்து நிமிடத்தில் லேப் டாப் வழங்கிவிட்டு அமைச்சரும் புறப்பட்டார். அப்போது அவரை மாணவிகள் முற்றுகையிட்டனர்.

சில மாணவிகள் அமைச்சர் காரை செல்ல விடாமல் நுழைவு வாயிலை அடைத்து உட்கார்ந்தப்படி போராட்டம் நடத்தினர். அமைச்சர், அதிகாரிகள் கார் பள்ளி வளாகத்திலே 10 நிமிடம் காத்திருந்தன. போலீசார் தலையிட்டு மாணவிகளை அப்புறப்படுத்தி அமைச்சர் காருக்கு வழிவிட்டனர். மாணவிகளின் எதிர்ப்பு கோஷங்களை கேட்டப்படி அமைச்சர் காரும் விலகி சென்றது.

 இதன் பின் ஆத்திரம் அடைந்த மாணவிகள் சிவகாசி ஸ்ரீவில்லிபுத்தூர் ரோட்டில் மறியலில் ஈடுப்பட்டனர். மாணவிகளை கைது செய்ய போலீசார் ஆயத்தமாக, பெற்றோர்களிடம் பேசி கலைந்து போக செய்தனர்

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...