செஞ்சி பகுதியில் அரசு கல்லூரிகள் இல்லாமல் நூற்றுக்கணக்கான ஏழை மாணவர்கள் உயர் கல்வி கற்க
முடியாத நிலை உள்ளது.
செஞ்சி தாலுகாவில் 23 அரசு மேல்நிலை பள்ளிகள், 4 தனியார் மேல் நிலை பள்ளிகள், 3 நிதியுதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகள் உட்பட 30 மேல்நிலை பள்ளிகள் உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் 5 ஆயிரத்திற்கும் அதிமானவர்கள் பிளஸ் 2 தேர்வு எழுதுகின்றனர். இதில் 85 சதவீதம் வரை தேர்ச்சி பெறுகின்றனர்.
செஞ்சி பகுதியில் அரசு கல்லூரிகள் இல்லை. இதனால் ஏழை மாணவர்கள் திண்டிவனம், விழுப்புரம், திருவண்ணாமலை அரசு கல்லூரிகளில் விண்ணப்பிக்கின்றனர். இதில் சிலருக்கே படிக்க வாய்ப்பு கிடைக்கிறது. வாய்ப்பு கிடைக்காதவர்கள் வேறு எங்கும் சேர்ந்து படிக்க வழியின்றி குறைந்த சம்பளத்தில் வேலைக்கு செல்கின்றனர்.
இந்த ஆண்டும் இதே போல் தேர்ச்சி பெற்ற ஆயிரக்கணக்கான மாணவர்கள் திண்டிவனம், விழுப்புரம், திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரிகளில் விண்ணப்பித்தனர். ஒரு சிலருக்கு மட்டும் சீட் வழங்கி உள்ளனர். நூற்றுகணக்கான மாணவர்களுக்கு நேர்முக தேர்வு கடிதம் கூட வரவில்லை. இதனால் வசதி இல்லாத பலர் படிப்பை கைவிட வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டுள்ளது.
செஞ்சியில் இருந்து தேர்வு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் உறுதியுடன் செயல்பட்டு, செஞ்சி தாலுகாவில் அரசு கல்லூரிகளை கொண்டு வராததால் ஒவ்வொரு ஆண்டும் இதே நிலை தொடர்கிறது.
மாணவர்களுக்கு கால் செருப்பு முதல் கணினி வரை இலவசமாக வழங்கும் அரசு, நூற்றுக்கணக்கான மாணவர்களின் கல்வி கனவு வீணாகி வருவதை கருத்தில் கொண்டு செஞ்சி பகுதியில் கல்லூரி துவங்க முன்வரவேண்டும்.