கஷ்டப்பட்டு படிக்காதீர், இஷ்டப்பட்டு படியுங்கள்"

மாணவர்கள் கஷ்டப்பட்டு படிக்காமல் இஷ்டப்பட்டு படிக்க வேண்டும்" என சிவகாசி ஜே.சி.ஐ.
மண்டல பயிற்றுனர் ஆறுமுகம் கூறினார்.

சிவகாசி அரசன் கணேசன் பாலிடெக்னிக்கில் என்.எஸ்.எஸ். திட்டம் சார்பில் "தலைமைப்பண்புகளும், உந்துதலும்" என்ற தலைப்பில் நடந்த சொற்பொழிவில் அவர் பேசுகையில், "அனைவரிடமும் தலைமை பண்புகள் உள்ளன. வெப்ப நிலையை அளக்க தெர்மோ மீட்டர் கருவி. ஏர் கண்டிஷனில் வெப்பநிலையை கட்டுக்குள் கொண்டுவர தெர்மோ ஸ்டார்ட் என்ற ரிமோட் உள்ளது.

இந்த ரிமோட் போல்தான் நாம் நம்முடைய மனதை கட்டுப்படுத்தி தற்போதைய கடமைகள் வாழ்வின் நோக்கம் ஆகியவற்றை புரிந்து செயல்பட வேண்டும். அமெரிக்காவில் 25வயது வரை படிப்பிற்கும், 25வயது முதல் 50 வயதுவரை உழைத்து பணம் ஈட்டுவதற்கும், 50 வயது முதல் 75வயது வரை ஓய்வு, பொழுது போக்கு என வாழ்கின்றனர்.

நம்நாட்டில் படிக்கும் வயதில் பொழுது போக்கிற்கு அதிக இடம் கொடுப்பதால் பல பிரச்னை வருகிறது. மாணவர்கள் கஷ்டப்பட்டு படிக்காமல் இஷ்டப்பட்டு படிக்க வேண்டும்" என்றார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...