பள்ளி வளாகத்தில் சிறுமியர் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளானால் பள்ளி நிர்வாகமே நேரடி பொறுப்பாவர்; ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியிருக்கும்.

பள்ளி வளாகத்தில் சிறுமியர் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளானால், பள்ளி நிர்வாகமே நேரடி பொறுப்பாவர் என முதல்வர் சித்தராமய்யா எச்சரித்துள்ளார்.


ஜம்கண்டி
தாலுகாவில் நிருபர்களிடம் முதல்வர் சித்தராமய்யா கூறியதாவது: பள்ளி வளாகத்தில் பிள்ளைகளை எச்சரிக்கையுடன் பார்த்து கொள்வது, பள்ளி நிர்வாகத்தினரின் பொறுப்பு. பள்ளி வளாகத்தில் சிறுமியர் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளானால் பள்ளி நிர்வாகமே நேரடி பொறுப்பாவர்; ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியிருக்கும்.

கர்நாடகா மாநிலத்தில் பாலியல் வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இது போன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். இப்படிப்பட்டவர்களை எக்காரணத்தை கொண்டும் அரசு சகித்து கொள்ளாது.

சட்டம் - ஒழுங்கை காப்பாற்ற அரசு அனைத்து விதமான கடும் நடவடிக்கைகளையும் மேற்கொண்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...