மாநில அளவிலான நீச்சல் போட்டி மனவளர்ச்சிகுன்றிய மதுரை மாணவன் சாதனை

சென்னையில் மாற்றுத் திறனாளிகள் பங்கு பெற்ற மாநில அளவிலான நீச்சல் போட்டி கடந்த வாரம் நடந்தது. இதில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 250–க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். இந்த போட்டியில் மதுரை மாவட்டத்தை சேர்ந்த மாணவர் பிரஜித் (வயது 9),
மன வளர்ச்சி குன்றியோருக்கான (ஆட்டிசம்) பிரிவில் முதலிடம் பிடித்து தங்கம் பதக்கம் வென்றார். இந்த பிரிவில் மதுரை மாணவர் ஒருவர் தங்கம் வெல்லது இதுவே முதல் முறை. எனவே அவருக்கு மதுரை மாவட்ட பாராலிம்பிக் நீச்சல் சங்கத்தின் சார்பில் பாராட்டு விழா நடந்தது. சாதனை படைத்த வீரரை மாவட்ட விளையாட்டு அதிகாரி முருகன், மாவட்ட பாராலிம்பிக் நீச்சங் சங்க செயலாளர் அப்துல்சலாம், பயிற்சியாளர்கள் காமராஜ், ரஞ்சித்குமார், மாணவரின் தந்தை கிரிதரன் ஆகியோர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...