தலைமை ஆசிரியை மாணவிகளை தரக்குறைவாக பேசுவது தொடர்பாக பெரியகுளம் மாவட்ட கல்வி அலுவலர் நாகராஜ், கெங்குவார்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி மாணவிகளிடம் விசாரணை நடத்தினார். அப்போது மாணவிகள் அழுதபடி
தலைமை ஆசிரியரை இடமாற்றம் செய்ய வேண்டும் என்றனர்.
தேவதானப்பட்டி அருகே உள்ள கெங்குவார்பட்டியில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. ஸ்ரீராம் நகர், புஷ்பராணிநகர், காட்ரோடு, கெங்குவார்பட்டி, காமக்காபட்டி ஆகிய கிராமங்களை சேர்ந்த 700க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். இப்பள்ளி தலைமை ஆசிரியராக மேனகா என்பவர் உள்ளார். இவருக்கும் ஆசிரியர்களுக்கும் ஈகோ பிரச்னை ஏற்பட்டது.
இந்நிலையில் மாணவ மாணவிகளை தலைமை ஆசிரியர் தகாத வார்த்தைகளில் திட்டுகிறார். இவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி மாணவர்கள் கடந்த ஜூலை 18ல் கொடைக்கானல்- வத்தலக்குண்டு ரோட்டில் ரோடு மறியல் செய்ய முயன்றனர். அப்போது பெற்றோர் மாணவர்களை சமாதானம் செய்து அழைத்து சென்றனர். பெற்றோர் பள்ளிக்கு சென்று பார்த்த போது தலைமை ஆசிரியை இல்லை.
இந்நிலையில் பெரியகுளம் கல்வி மாவட்ட அலுவலர் நாகராஜ் நேற்று கெங்குவார்பட்டி உயர்நிலைப்பள்ளிக்கு சென்றார். அப்போது பெற்றோர், மாணவிகளை தனித்தனியாக சந்தித்துப் பேசினார். பெற்றோர் அடுக்கடுக்கான புகார் கூறினர். மேலும் தலைமை ஆசிரியரை இடமாற்றம் செய்ய வேண்டும். அவர் மாணவிகளிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றனர்.
மாணவிகளை அழைத்து தனியாக விசாரித்த போது தலைமை ஆசிரியை அசிங்கமாக திட்டிய வார்த்தைகளை கூறி மாணவிகள் அழுதனர். அடுத்ததாக ஆசிரியர்களிடமும் விசாரணை நடத்தினார். தலைமை ஆசிரியை மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினார்.