மாற்றுத்திறனாளி பள்ளிகளை கவனிக்க கோரிக்கை..!

மாற்றுத்திறனாளி பள்ளிகளுக்கு ஆசிரியர் சம்பளம், உணவு மான்யம் உள்ளிட்டவற்றை உடனடியாக வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழ்நாடு மாற்று திறனாளி பள்ளிகள் நல சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம், விழுப்புரத்தில் நடந்தது. மாநில பொதுச்செயலாளர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.
மாநில தலைவர் ஜெயசந்திரன் வரவேற்றார். மாற்றுத் திறனாளி பள்ளி நிர்வாகிகள் ஸ்டார்லெட்ச், லூயிஸ்ராயன், செல்வி, அனிதா, கவிதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாற்றுத் திறனாளிகள் பள்ளிகளுக்கு 2013-14ம் ஆண்டிற்கு உணவீட்டு மான்யம், கட்டட வாடகை போன்றவற்றிற்கு 50 சதவீதம் குறைத்து வழங்கப்பட்ட தொகையை, மீண்டும் வழங்க வேண்டும். சிறப்பு பள்ளி ஆசிரியர்களுக்கான சம்பளம் வழங்க வேண்டும். அங்கீகாரம் ரத்து செய்யப்பட்ட பள்ளிகளுக்கு மீண்டும் அனுமதி வழங்க வேண்டும். மாற்றுத் திறனாளிகள் பள்ளிகளுக்கு இலவச மின்சாரம் வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...