ராணுவத்தில் ஆசிரியர் பணி விண்ணப்பிக்க அழைப்பு

ராணுவத்தில் ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. திருச்சி, தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், கரூர் காரைக்கால், சிவ கங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, விருதுநகர் மாவட்டங்களை
சேர்ந்த திருமணமாகாத குரூப் ஒய் பிரிவில் பி.ஏ, பிஎஸ்சி, பிசிஏ, பிஎஸ்சி (ஐடி)ஆகியவற்றுடன் பி.எட் பட்டம் பெற்றிருக்க வேண் டும். பட்டங்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகங்களின் மூலம் பெற்றிருக்க வேண்டும். இதற்கான எழுத்து தேர்வு அக்டோபர் 26ம் தேதி அன்று நடை பெறுகிறது. இதில் 21 முதல் 25 வயது வரை உள்ளவர்கள் இருத்தல் வேண்டும். பட்டதாரி இளைஞர்கள் இந்த ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம். குரூப் எக்ஸ் பிரிவில் எம்.ஏ, எம்.எஸ்.சி, எம்.சிஏ அல்லது பிஏ, பிஎஸ்சி, பிஎஸ்சி (ஐடி) ஆகிய படிப்புடன் பி.எட். தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பிக்க விரும்பு வோர் ஆகஸ்ட் 10ம் தேதிக் குள் ‘ராணுவ ஆள்தேர்வு அலுவலகம், கருடா லைன்ஸ், கன்டோன்மென்ட், திருச்சி 620001‘ என்ற முகவரியில் விண்ணப்பிக்கவேண்டும். மேலும் விவரங்களுக்கு 0431-24122 54 என்ற தொலை பேசியிலும் தொடர்பு கொள்ளலாம். இந்த தகவலை திருச்சி ராணுவ ஆள்தேர்வு அலுவ லக சுபேதார் மேஜர் தர்பீசர்சிங் தெரிவித்துள்ளார்

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...