மாணவர்களை பள்ளிக்கு அனுப்பாமல் பெற்றோர் போராட்டம்

கிருஷ்ணகிரி அடுத்த கும்மனூரில் தரம் உயர்த்தப்பட்ட அரசு நடுநிலைப்பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்ட அதே பகுதியில் உள்ள புறம்போக்கு நில ஆக்கிரமிப்பை வருவாய் துறையினர் அகற்றாததை கண்டித்து மாணவர்களை பள்ளிக்கு அனுப்பாமல் பொதுமக்கள் போராட்டத்தில்
ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கிருஷ்ணகிரி அடுத்த கும்மனூரில் அரசு துவக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. கடந்த 2011 டிசம்பர் 11ம் தேதி இந்த பள்ளி அரசு உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. தரம் உயர்த்தப்பட்ட இந்த பள்ளியில் தற்போது ஆறாம் வகுப்பு முதல் எஸ்.எஸ்.எல்.ஸி. வரை 101 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். ஒரு தலைமை ஆசிரியர் உள்பட எட்டு ஆசிரியர்கள், உயர்நிலைப்பள்ளியில் பணியில் உள்ளனர்.

அரசு நடுநிலைப்பள்ளியாக இருந்த போது ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை மாணவ மாணவிகள் துவக்கப்பள்ளிக்கு கட்டப்பட்ட கட்டிடத்தில் படித்து வந்தனர். இதனால் ஒன்றாம் வகுப்பு முதல் எஸ்.எஸ்.எல்.ஸி. வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவிகளுக்கு போதிய வகுப்பறை வசதி இல்லாமல் இருந்தது.

இதனையடுத்து ஊருக்கு வெளியே உள்ள 25 ஏக்கர் புறம்போக்கு நிலத்தில் அரசு உயர்நிலைப்பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்ட ஊர் பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்தனர். இந்நிலத்தில் ஏழு பேர் ஆக்கிரமித்து வீடுகள் கட்டியும், விவசாயம் செய்தும் வருகின்றனர்.

புறம்போக்கு நிலத்தில் ஆக்கிரமிப்பு செய்தவர்களை அகற்றி விட்டு அங்கு பள்ளி கட்டிடம் கட்ட வேண்டும் என்பதை வலியுறுத்தி சில நாட்களுக்கு முன் கும்மனூரை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர், தங்களிடம் உள்ள ரேஷன் கார்டு மற்றும் வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றை வருவாய் துறையினரிடம் ஒப்படைத்தனர்.

இந்நிலையில் நேற்று காலை அரசு துவக்கப்பள்ளி மற்றும் அரசு உயர்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகளை பள்ளிக்குள் செல்ல அனுமதிக்காமல் அவர்களை பள்ளிக்கு வெளியில் அமர வைத்து பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்த சி.இ.ஓ. ராமசாமி, தாசில்தார் நடராஜன், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் சசிகலாவதி மற்றும் தாலுகா எஸ்.ஐ. மதனலோகன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று போராட்ட குழு தலைவர் மாதேஸ் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகளின் பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பள்ளி கட்டிடம் கட்ட புறம்போக்கு நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் வரை மாணவ மாணவிகளை பள்ளிக்கு அனுப்ப மாட்டோம் என பொதுமக்கள் தெரிவித்ததால், அதிகாரிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர். இதனையடுத்து இன்று (19ம் தேதி) ஆர்.டி.ஓ. தலைமையில் கும்மனூரில் உள்ள புறம்போக்கு நிலத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற அளவு மேற்கொள்வதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...