புதிய ரேஷன் கார் டுகள் கிடைக்காதவர்கள் பொருட்கள்
வாங்க ri முடியாமலும், சான்றுகள் பெற்று மாணவர்களை பள்ளியில் சேர்க்க முடியாமல் மிகவும் சிரமப்படுகின்றனர்.
குழந்தைகளை பள்ளியில் சேர்க்க வருமானம், குடியிருப்பு, ஜாதி சான்றுகள் பெறுவதற்கு ரேஷன் கார்டுகளை அடிப்படை ஆதாரமாக கொண்டே வி. ஏ.ஓ.,க்கள் மற்றும் தாசில்தார்கள் கையெத்திட்டு சான் றுகள் வழங்குகின்றனர்.
விலையில்லா பொருட்கள்
அரசு சார்பில் வழங்கும் இலவச மிக்சி, கிரைண்டர், பேன், கறவை மாடு, ஆடுகள், திருமண உதவித் தொகைகள் உள்ளிட்ட அனைத்து உதவிகளும் ரேஷன் கார்டுகள் இருந்தால் மட்டுமே கிடைக்கும். ஏழை குடும்பத்தினர் ரேஷன் கார்டுகளைப் பயன்படுத்தி இலவச அரிசி, சர்க்கரை, மண்ணெண்ணெய் உட்பட அத்தியாவசியப் பொருட்களை பெற முடியும்.
புதிதாக திருமணம் நடந்தவுடன் தனிக் குடித்தனம் சென்றவர்கள், புதிய ரேஷன் கார்டுகள் கோரி கலெக்டர் அலுவலகத்திலும் அல்லது வட்ட வழங்கல் அலுவலகங்களிலும் விண்ணப்பித்துள்ளனர். புதிதாக விண்ணப்பிப்போரின் பெயர்கள், பழைய கார்டுகளில் இருந்து பெயர் நீக்கி, திருமண அழைப்பிதழ், வீட்டு வரி ரசீது, மின் கட்டண ரசீது, பாங்க் பாஸ் புத்தக நகலை ஆதாரமாக தருகின்றனர்.
காத்திருப்பு
விழுப்புரம் மாவட்டத்திலுள்ள 10 தாலுகாவிலும், 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் புதிய ரேஷன் கார்டுகள் கோரி விண்ணப்பித்து கடந்த 4 ஆண்டுகளாக காத்துக் கிடக்கின்றனர்.
ரேஷன் கார்டு இல்லாத குடும்பங்களில், 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களை பள்ளியில் சேர்க்க முடியாமல் பெற்றோர்கள் சிரமப்படுகின்றனர். அனைத்து சான்றுகள் பெறவும் ரேஷன் கார்டு பிரதானமாக உள்ளதால், பல குடும்பங்கள் அரசு நலத் திட்ட உதவிகளை பெற முடியாமலும், மாணவர்களை பள்ளி, கல்லூரிகளில் சேர்க்க முடியாமலும் திண்டாடுகின்றனர்.
தங்களின் அடிப்படை உரிமைகள் பாதிக்கப்படும் போது, ரேஷன் கார்டுகளை அரசு அதிகாரிகளிடம் ஒப்படைக்கும் போராட்டங்களில் மக்கள் ஈடுபடுகின்றனர்.
புதிய ரேஷன் கார்டுகள் கிடைக்காதது குறித்து அதிகாரிகளிடம் கேட்டால், போலி ரேஷன் கார்டுகள் அதிகம் உள்ளதால், புதிய கார்டுகள் வழங்கவில்லை என காரணம் கூறுகின்றனர். அப்பாவி ஏழைகளை பாதிக்கும் வகையில் விழுப் புரம் மாவட்டத்தில் மட்டுமே புதிய கார்டுகள் வழங் காமல் காலம் தாழ்த்தி வருகின்றனர் என மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
நடவடிக்கை தேவை
ரேஷன் கார்டு இல்லாத குடும்பங்களில் வாக்கா ளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை மற்றும் டிரைவிங் லைசென்ஸ் வைத்திருந்தும், வருவாய்துறை மூலம் புதிய சாறுகள் பெறவும், அரசு நலத் திட்டங்கள் பெறவும் முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏழை மக்களின் வாழ்வாதரத்திற்கு தேவையான உணவுப் பொருட்களை ரேஷன் கடைகள் மூலம் பெறவும், வருவாய் துறை மூலம் சான்றிதழ்கள் பெறவும் மற்றும் அரசு நலத்திட்டங்களை பெற்றிடவும் ஆதாரமாக விளங்கும் ரேஷன் கார்டுகளை உடனடியாக வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.