சுதந்திர தினத்தன்று, சுற்றுச் சூழலுக்கு மாசு ஏற்படுத்துகின்ற பிளாஸ்டிக் தேசிய கொடியை பயன்படுத்தக் கூடாது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.நாட்டின் 67-வது சுதந்திர தினம் அடுத்த மாதம் 15ம் தேதி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.
இந்த கொண்டாட்டத்தின் போது, பொதுமக்கள் நலன் கருதி பேப்பரில் தயாராகும் மூவர்ண தேசிய கொடிகளையே பயன்படுத்த வேண்டும் என்றும், பிளாஸ்டிக் தேசிய கொடிகளை பயன்படுத்தக் கூடாது என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது.இது குறித்து மத்திய உள்துறை அமைச்சகத்தின் பொதுப்பிரிவு இயக்குனர் சியாமளா மோகன் அனைத்து மாநில அரசுகளுக்கும் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:அரசு மற்றும் தனியார் நடத்தும் முக்கிய விழாக்களில் பேப்பரால் தயாரிக்கப்பட்ட தேசிய கொடிகளுக்கு பதில் பிளாஸ்டிக்கால் தயாரிக்கப்பட்ட தேசிய கொடிகளை அதிகம் பயன்படுத்துகின்றனர். பிளாஸ்டிக் தேசிய கொடிகள் எளிதில் மக்காது. இதனால் சுற்றுச் சூழலுக்கு அதிக அளவில் மாசு ஏற்படுத்துகிறது. இதனை கவுரவமாக அழிப்பது மிகுந்த சிரமமாக உள்ளது. எனவே எந்த விழாக்களாக இருந்தாலும் பிளாஸ்டிக் தேசிய கொடிகளை பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது. பேப்பர் தேசிய கொடிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று மக்களிடம் மாநில அரசுகள் விழிப்புணர்வு ஏற்படுத்த கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு அதில் கூறியுள்ளார்.பிளாஸ்டிக் தேசிய கொடியை விற்பவர்கள், வாங்குபவர்கள் மற்றும் பயன்படுத்துபவர்கள் மீது தேசிய கவுரவம் இழிவு படுத்தப்படுவதை தடுக்கும் சட்டம் 1971ன் கீழ் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே இந்த சட்டத்தின் கீழ், பிளாஸ்டிக் தேசிய கொடியை பயன்படுத்துபவர்கள் மீது 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதித்து நடவடிக்கை எடுக்க முடியும்.