சிலப்பதிகாரத்தின் புகழ் பரப்புவோருக்கு தமிழ் புத்தாண்டு அன்று இளங்கோவடிகள் விருது வழங்கப்படும்" என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
சட்டசபையில் நேற்று 110வது விதியின் கீழ் அவர் வெளியிட்ட
அறிவிப்புகள்:
இளங்கோவடிகள் நடையையொட்டி, புதிய காப்பியம் படைப்போருக்கோ, சிலப்பதிகாரத்தின் புகழ் பாடுவோருக்கோ, இளங்கோவடிகள் விருது வழங்கப்படும். தமிழ் புத்தாண்டு அன்று வழங்கப்படும் இந்த விருது 1 லட்சம் ரூபாய் ரொக்கம், 1 சவரன் தங்கப் பதக்கம், தகுதியுரை ஆகியவற்றை உள்ளடக்கியது.
* தமிழ் வளர்ச்சிக்குப் பாடுபடும் ஆர்வலர்களைக் கண்டறிந்து அவர்களைப் பெருமைப்படுத்தும் வகையில் தமிழ் செம்மல் விருதுகள் வழங்கப்படும். இந்த விருதுக்கு மாவட்டத்துக்கு ஒருவர் தேர்வு செய்யப்படுவர். இது 25 ஆயிரம் ரூபாய் ரொக்கம், தகுதியுரை விருது உள்ளடக்கியது.
* தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் 15 கோடி ரூபாய் செலவில் புதிய கட்டடங்கள் கட்டப்படும்.
*சென்னை உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் சுடுமண், சுதை சிற்பம், மரம், கல், உலோகம் ஆகியவற்றைக் கொண்டு படிமங்களாக வடிவமைத்த கலைப் பொருட்களைக் கொண்டு பழந்தமிழர் வாழ்வியல் காட்சிக் கூடம் 2.50 கோடி ரூபாயில் அமைக்கப்படும். இவ்வாறு அவர் அறிவித்தார்.