தகுதித்தேர்வில் தோல்விஇளம்பெண் தூக்கிட்டு தற்கொலை

ஆசிரியர் தகுதித்தேர்வு எழுதி, இரண்டு முறையும் தோல்வி அடைந்ததால், மனமுடைந்த இளம்பெண், துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். நாமக்கல், முல்லை நகரை சேர்ந்தவர் சசிகுமார், 37. இவர்,
இந்துசமய அறநிலையத் துறையில், டைப்பிஸ்டாக உள்ளார். இவரது மனைவி இளவரசி, 28, எம்.எஸ்சி., முடித்துள்ளார். இவர்களுக்கு, நான்கு வயதில் ஆண் குழந்தை உள்ளது.


இளவரசி, அரசு வேலைவாய்ப்பிற்காக, ஆசிரியர் தகுதித்தேர்வு எழுதியுள்ளார். முதல் முறை தோல்வி அடைந்த அவர், இரண்டாவது முறையும் தேர்ச்சி பெறவில்லை. இதனால், மனமுடைந்த இளவரசி, நேற்று அதிகாலை, 2:00 மணிக்கு, தன் வீட்டில், துப்பட்டாவில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். நாமக்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...