ஆட்சியரை அதிர்ச்சி அடைய வைத்த பீகார் பள்ளி ஆசிரியையின் பொது அறிவு

பீகாரில் இடமாற்றம் கோரி மனு செய்த பள்ளி ஆசிரியையின் பொது அறிவை பரிசோதித்த கலெக்டர், நாட்டின் ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் எனவும் பீகார் கவர்னர் ஸ்மிருதி இராணி எனவும் தேர்வு எழுதியிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். ஆசிரியையின் பட்டபடிப்பு உள்ளிட்ட
கல்வி சான்றிதழ் குறித்து ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

பீகார் மாநில கல்வி அமைச்சர் பிரிஷன் பட்டேல் கடந்த வாரம் அறிக்கை வெளியிட்டார். போலி சான்றிதழ் கொடுத்து ஆசிரியர் பணியில் சேர்ந்தவர்கள் கண்டறியப்பட்டால் அவர்கள் உடனே டிஸ்மிஸ் செய்ப்படுவதுடன் சிறை தண்டனை விதிக்கப்படும் என கூறினார்.

இந்நிலையில் இம்மாநிலத்தின் கயா மாவட்டத்தின் தும்ரி நகரின் பாங்கே பஜார் கிராமத்தில் உள்ள ஆரம்ப பள்ளி ஆசிரியையாக பணியாற்றி வரும் அனிதா என்ற ஆசிரியை, மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த (ஜனதா தர்பார் ) மக்கள் குறைதீர் கூட்டத்தின் போது மனு கொடுத்தார். அதில் தாம் பணியாற்றும் கிராமம் நக்சலைட்டுகள் ஆதிக்கத்தில் இருப்பதால் உயிர்பயம் கருதி தனது சொந்த கிராமத்திற்கு இடமாறுதல் தருமாறு கோரினார்.

அவரது மனுவை பரிசீலித்த கலெக்டர் சஞ்சய் அகர்வால், ஆசிரியை அனிதா மற்றும் இவரை போன்று இடமாறுதல் கோரிய மற்ற ஆசிரியர், ஆசிரியைகள் உள்ளிட்டோரின் பொது அறிவை பரிசோதிக்க தேர்வு வைத்தார்.

தேர்வு முடிந்ததும் ஆசிரியை அனிதா எழுதிய விடைத்தாளை பார்த்த கலெக்டருக்கு தூக்கிவாரி போட்டது. தேர்வில் பொது அறிவுக்கான வினாத்தாளில் அனிதா என்ற ஆசிரியை நாட்டின் ஜனாதிபதி பிரதீபா பாட்டீல், பீகார் கவர்னர் ஸ்மிருதி இராணி எனவும் எழுதியிருந்தார். மேலும் ஜனவரி என்ற ஆங்கில எழுத்தை ஜுனவரி எனவும், ஆப்பிள் என்பதை அபிள் எனவும், எஜுகேசன் என்பதை அடூகேசன் எனவும் தவறாக எழுதியிருந்தார்.

இவ்வளவு மோசமான பொது அறிவுடன் இவர் எப்படி அரசுப் பள்ளி ஆசிரியர் பணிக்கு தேர்வானார் என்ற சந்தேகம் ஏற்பட்டது. உடனே மாவட்ட கல்வி அதிகாரியை தொடர்பு கொண்டு, ஆசிரியை அனிதாவின் கல்வித்தகுதி உள்ளிட்ட சான்றிதழ்களை ஆய்வு அறிக்கை அனுப்புமாறு உத்தரவிட்டார்.

அனிதா கொடுத்த சான்றிதழ் போலி சான்றிதழாக என தெரியவந்தால் அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டார்.

சில ஆண்டுகளுக்கு முன்னர் சமஸ்திபூர் மாவட்டத்தை சேர்ந்த ஒரு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் ஆண்டுக்கு 360 நாட்கள் எனவும் நாட்டின் தலைநகர் பாட்னா என்றும் மாணவர்களுக்கு சொல்லி் கொடுத்தது காமராவில் படம் பிடிக்கப்பட்டு உள்ளூர் சானலில் ஒளிபரப்பான சம்பவமும் நடந்திருக்கிறது. இத்தகைய சம்பவம் கல்வியாளர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...