முறையற்ற உணவு, உடற்பயிற்சியின்மை, சிகரெட் பழக்கங்களால், இளைஞர்களை
பக்கவாதம் தாக்குகிறது,'' என, போரூர் ஸ்ரீராமச்சந்திர மருத்துவ மைய இருதய துறைத் தலைவர் டி.ஆர்.முரளிதரன் தெரிவித்தார்.மதுரையில் இந்திய மருத்துவ கழக மீனாட்சி மிஷன் கிளை சார்பில் நடந்த டாக்டர்களுக்கான விழிப்புணர்வு கலந்துரையாடலில் அவர் பேசியதாவது:மூளைக்குச் செல்லும் ரத்தக்குழாயில் அடைப்பு ஏற்பட்டால் எந்த நிமிடத்திலும் பக்கவாதம் வரலாம். பேசிக்கொண்டிருக்கும் போதே திடீரென மயங்கி விழுந்து பேச்சு வராமல் போகலாம். கண்பார்வை மறையலாம். கை, கால்கள் இழுத்துக் கொள்ளலாம்.
நோய்க்கு முந்தைய அறிகுறி எதுவும் வராது என்பதால், பக்கவாதம் ஏற்பட்ட உடனேயே சிகிச்சையை துவங்க வேண்டியது அவசியம். ஆரம்பகட்ட சிகிச்சையின் மூலமே உறுப்புகள் செயலிழப்பைத் தடுக்க முடியும்.வயதான காலத்தில் ரத்தக்குழாயில் அடைப்பு ஏற்படும். பிறவியிலேயே இருதய வால்வு பிரச்னை, இருதயக் கோளாறு பிரச்னை இருக்கலாம். அதை கவனிக்காமல் விடும் போது, பக்கவாதம் ஏற்படும் வாய்ப்பு அதிகம்.
இளம்வயதினரை பொறுத்தவரை ஆண்களுக்கு சிகரெட் புகைப்பதால், அதிக ரத்தஅழுத்தத்தால், சர்க்கரை நோயாலும், பெண்களுக்கு கொழுப்பு பிரச்னையாலும் பக்கவாதம் ஏற்படும் அபாயம் உண்டு.பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டோரில் 20 சதவீதம் பேருக்கு, அதிவேகமாக இருதயம் துடிப்பதால் ஏற்படுகிறது. குறிப்பாக இளையோர்தான் இலக்காகின்றனர். ஆண்களுக்கு உடல்நலம் இல்லையென்றால், உடனடியாக மனைவி அல்லது குடும்பத்தினர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கின்றனர். பெண்களுக்கு உடல்நலம் இல்லையென்றால், கண்டுகொள்வதில்லை. இது துரதிருஷ்டவசமானது, என்றார்.