சேலம் மாவட்டம் ஏற்காட்டை அடுத்த செம்ம நத்தம் பஞ்சாயத்திற்கு உட்பட்ட எஸ்.புத்தூர் கிராமத்தில் உள்ள அரசினர் பழங்குடியினர் உண்டு உறைவிடத் தொடக்கப் பள்ளியில் 1–ஆம் வகுப்பு முதல் 5–ஆம் வகுப்பு வரை உள்ளது. இந்த பள்ளியில் சரிவர ஆசிரியர்கள்
பள்ளிக்கு வராததால் பள்ளி மாணவர்கள் வேறு பள்ளிக்கு செல்லும் அவலம் ஏற்பட்டு உள்ளது. தற்போது இந்த பள்ளியில் 15 மாணவ–மாணவிகள் மட்டுமே படித்து வருகின்றனர். இதே நிலை நீடித்தால் இந்த பள்ளியை மூடும் அவல நிலை ஏற்படும் என்று பொதுமக்கள் அஞ்சுகின்றனர். இந்த பள்ளிக்கு ஒரு ஆசிரியர் மட்டுமே உள்ளார். இந்த பள்ளியில் பயிலும் மாணவ–மாணவிகளுக்கே ஆசிரியரின் பெயர் தெரிய வில்லை. இவர் சரிவர பள்ளிக்கு வருவதில்லை என்று பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். இந்த பள்ளியில் ஆசிரியர் இல்லாத நேரங்களில் இந்த பள்ளியின் காவலாளி ஆண்டி பள்ளி குழந்தைகளை கவனித்து கொள்கிறார்.